Asianet News TamilAsianet News Tamil

Sponge cake recipe : வீட்டிலேயே சாஃப்டான "ஸ்பான்ஜ் கேக்" செய்ங்க!

கேக்கில் வெண்ணிலா கேக், மார்பில் கேக், பான் கேக் என்று பல விதங்களில் கேக் வகைகள் உள்ளன. அந்த வகையில்,இன்று நாம் சுவையான,சாஃப்டான ஸ்பான்ஜ் கேக் எப்படி வீட்டில் செய்வது என்று தெரிந்து கொள்ள போகிறோம்.

How to Prepare Sponge Cake in Tamil
Author
First Published Nov 9, 2022, 3:47 PM IST

வழக்கமாக நம்மில் பெரும்பாலோனோர் கேக், பிரட் போன்றவற்றை வெளியில் கடையில் சென்று தான் சுவைத்து இருப்போம்.அதனையே நாம் வீட்டில் சுத்தமான முறையில், செய்தால் அதிகமாகவும், சுவையாகவும் செய்யலாம். இப்படி சுவையாக செய்யும் பொழுது, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள்.

கேக்கில் வெண்ணிலா கேக், மார்பில் கேக், பான் கேக் என்று பல விதங்களில் கேக் வகைகள் உள்ளன. அந்த வகையில்,இன்று நாம் சுவையான,சாஃப்டான ஸ்பான்ஜ் கேக் எப்படி வீட்டில் செய்வது என்று தெரிந்து கொள்ள போகிறோம். 

தேவையான பொருட்கள்:

பட்டர் - 1/2 கப்
தயிர் - 1/2 கப்
சர்க்கரை - 3/4 கப்
முட்டை -1
உப்பு - 1 சிட்டிகை 
மஞ்சள் கரு மட்டும் - ஒன்று
வெண்ணிலா  எசன்ஸ் - ஒரு ஸ்பூன் 
பொடித்த நட்ஸ்- 3 ஸ்பூன் 

ஆரோக்கிய நலன்களை வாரி வழங்கும் "பீட்ரூட் கட்லெட் " இன்றே செய்து சாப்பிடுங்க.

செய்முறை:

முதலில்  அவனை 350 டிகிரிக்கு ப்ரீ ஹீட் (Pre Heat) செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து மீண்டும் அனைத்தையும் நன்றாக கலந்து விட்டு, ஒரு சல்லடை போட்டு, வேறொரு தட்டில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்

இப்போது பேக்கிங் பான்,சுற்றி சிறிது பட்டர் ஸ்ப்ரெட் செய்து கொள்ள வேண்டும். பின் அதன் மேல் மைதா மாவினை தூவி விட்டு பேக்கிங் Pan ஐ ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையையும், பட்டரையும் சேர்த்து கலந்து விட்டு, நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும்.பின் அந்த பௌலில், மஞ்சள் கருவை மட்டும் சேர்த்து மீண்டும், பீட் செய்து கொள்ள வேண்டும். இப்போது இதில்  வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

இப்போது இந்த கலவையில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலக்குமாறு, நன்றாக பீட் செய்து கொண்டு , பின் அதனுடன் சலித்து வைத்துள்ள மைதா மாவினை, சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தயிரை சேர்த்து பீட் செய்து கொள்ள வேண்டும். 

பாத்திரத்தில் உள்ள கலவையை பேக்கிங் பேனிற்கு மாற்றி கொண்டு, அதன் மேல் தேவையென்றால் நட்ஸ் தூவிக் கொள்ளலாம்.அதன் பிறகு பேக்கிங் பேனை சுமார் 40 நிமிடங்கள் வரை,அவனில் வைத்து Bake செய்து கொள்ள வேண்டும். 

பின் 10 நிமிடங்கள் பேக்கிங் பேனிலேயே வைத்து, பிறகு ஒரு பெரிய தட்டில் கவிழ்த்து கொண்டு, ஒரு கத்தியால் மெதுவாகத் தட்டி விட்டால், சாஃப்ட்டான ஸ்பாஞ்ச் கேக் ரெடி!!! பின் கத்தியால் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்

Follow Us:
Download App:
  • android
  • ios