1 வாரம் ஆனாலும் கெட்டு போகாத மிளகு தொக்கு இப்படி செய்து பாருங்க! 1 தட்டு சாதம் அதிகமாக சாப்பிடுவாங்க!

வாருங்கள்! ருசியான மிளகுத் தொக்கு ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to prepare Pepper Kuzhambu  in Tamil

செட்டிநாடு உணவு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும். செட்டிநாடு சமையல்கள் பெரும்பாலும் காரசாரமாகவும், அதீத சுவையுடனும் இருக்கும். இப்படியான ருசிக்கு மிக முக்கிய காரணம் அவர்கள் சமையலில் பயன்படுத்தும் மசாலா பொருட்கள் தான்.அப்படியான செட்டிநாடு சமையலில் மிக பிரபலமான ஒரு ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம்.

காய்கறிகள் எதுவும் இல்லாத நேரத்தில் இந்த மாதிரியான ஒரு தொக்கு செய்து பாருங்க. 1 வாரம் வரை கெடாமல் இருக்கும் அதே நேரத்தில் ருசியும் சூப்பராக இருக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொண்டால் இதனை தாராளமாக எடுத்துக் கொண்டு செல்லலாம்.

வாருங்கள்! ருசியான மிளகுத் தொக்கு ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

மிளகு – 1 ஸ்பூன்
மல்லி – 1 ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
வர மிளகாய் – 3
சீரகம் – 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
புளி – 1 லெமன் சைஸ்
கடுகு -1/4 ஸ்பூன்
உளுந்து – 1/4 ஸ்பூன்
பெருங்காயம் – 1சிட்டிகை
கருவேப்பிலை – 1 கொத்து
மஞ்சள் தூள் -1 1/4 ஸ்பூன்
கல் உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய்-தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் ஒரு பான் வைத்து கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம்,வர மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். வறுத்தவற்றை தனியாக வைத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே பானில் தேங்காய் துருவல் சேர்த்து அதன் ஈர தன்மை செல்லும் வரை வறுத்து அதனையும் ஆற வைத்துக் கொள்ள வேண்டும். புளியை ஒரு சின்ன கிண்ணத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது மிக்சி ஜாரில் வறுத்து ஆற வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து ,சிறிது புளி தண்ணீரையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் 1 கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின்பு கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளித்து விட்டு பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

வெங்காயம் வதங்கிய பிறகு, அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். பிறகு மீதமுள்ள புளித்தண்ணீர் மற்றும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அதில் குழம்பு மிளகாய் பொடி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அவ்ளோதான்! சுவையான மிளகு தொக்கு ரெடி! சூடான சாதத்தில் இதனை ஊற்றி சாப்பிட்டால் வேறு எதையும் தேடவே மாட்டார்கள்.

செவ்வாழையை லேசுல நினைச்சுடாதீங்க! இத்தனை நன்மைகள் தர்றப்போ தினமும் 1 கூட சாப்பிடலன்னா எப்படி?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios