வெண்டைக்காய் பிரை தெரியும்? வெண்டைக்காய் சட்னி தெரியுமா?

இன்று நாம் வெண்டைக்காய் வைத்து சத்தான மற்றும் சுவையான சட்னியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How to prepare Ladies Finger Chutney in Tamil

வெண்டைக்காய் வைத்து நாம் சாம்பார், குழம்பு, பிரை என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம். வெண்டைக்காய் சட்னி செய்து இருக்கீங்களா? வழக்கமாக இட்லி,தோசைக்கு எப்போதும் தேங்காய் சட்னி , கார சட்னி, தக்காளி சட்னி தான் செய்கின்றோம். ஒரு மாற்றாக வெண்டைக்காய் வைத்து சுவையான சட்னி செய்யலாமா? 

இன்று நாம் வெண்டைக்காய் வைத்து சத்தான மற்றும் சுவையான சட்னியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

சீரகம் - 1/2 ஸ்பூன் 
கடலை பருப்பு-1/2 ஸ்பூன் 
தனியா-1/2 ஸ்பூன் 
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன் 
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5 
எண்ணெய் -தேவையான அளவு 
பூண்டு - 5 பல் 
வெண்டைக்காய் - 2 கப் ( பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 ( பொடியாக நறுக்கியது) 
புளி - ஒரு சிறிய துண்டு 
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கடுகு - 1 ஸ்பூன் 
வரமிளகாய் - 2 
உளுத்தம் பருப்பு - 1/2ஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 

சுவையான செட்டிநாடு ஸ்டைல் காளான் மசாலா!

செய்முறை: 

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துசிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்,அதில் சிறிது உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் ,தனியா,சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும். பின் அதனை ஆற வைத்து விட்டு, ஒரு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் அதே கடாய் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்த பிறகு, பூண்டு சேர்த்து வதக்கி விட்டு பின், வெண்டைக்காயை சேர்த்து நன்றாக பிசுபிசுப்பு செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.

வெண்டைக்காயின் பிசுபிசுப்பு சென்ற பிறகு, அதில் தக்காளி சேர்த்து , தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி விட வேண்டும். பின் அதில் புளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சாப்ட்டாக மாறும் வரை வதக்கி விட்டு. பின் அதனை இறக்கி ஆற வைக்க வேண்டும்.

பின் அதனை ஒரு மிக்சர் ஜாரில் மாற்றி, அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா பவுடர் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு சுற்று சுற்றி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து , அதில் சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்த பிறகு,கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும் , பின் அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து, எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை சுமார் 3 நிமிடங்கள் வதக்கி விட வேண்டும்.அவ்ளோதாங்க சுவையான மற்றும் சத்தான வெண்டைக்காய் சட்னி ரெடி!!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios