Asianet News TamilAsianet News Tamil

சுவையான செட்டிநாடு ஸ்டைல் காளான் மசாலா!

உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு காளான் பிடிக்குமா? அதிலும் குறிப்பாக செட்டிநாடு உணவு வகைகளை விரும்புவார்களா? அப்படியெனில் இன்று இரவே நீங்கள் காளானை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் இந்த காளான் மசாலாவை நிச்சயம் செய்து மகிழுங்கள். 

How to make mushroom masala in Tamil
Author
First Published Oct 23, 2022, 11:57 PM IST

.இந்த ரெசிபியை சுலபமாக மற்றும் சுவையாக இருப்பதால் அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் இருக்கும். இந்த காளான் மசாலா சப்பாத்திக்கு மட்டுமலலாமல் , தோசை, பரோட்டா மற்றும் சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். இன்றைய பதிவில் சுவையான காளான் மசாலாவை வீட்டில் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம். 

காளான் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

கிராமத்து மண் வாசனையுடன் மண் சட்டியில் கோழிக்கறி குழம்பு!

காளான் - 2 கப் ( நீளவாக்கில் வெட்டியது)
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு 
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது

மசாலா பொடி செய்ய :

சின்ன வெங்காயம் - 2-3
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 2
தனியா -1 ஸ்பூன் 
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்

செய்முறை:

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, கடாய் சூடான பின் அதில் சின்ன வெங்காயம், தனியா, சோம்பு, மிளகு, சீரகம், வர மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்து ஆற வைத்து , பின் அதனை மிக்சர் ஜாரில் போட்டு பொடி போன்று அரைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுவையான சுரைக்காய் போளி சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கலாம் வாங்க!

இப்போது காளானை நன்றாக சுத்தம் செய்து, நீளவாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்த பின் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். 

பின் காளானை சேர்த்து ஏறக்குறைய 7 நிமிடங்கள் வரை நன்றாக வதக்க வேண்டும். (தண்ணீர் சேர்க்காமல் வதக்க வேண்டும்) பின் தக்காளி பழம் சேர்த்து வதக்கி கொண்டு, தேவையான அளவு உப்பு மற்றும் சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

அடுத்து ஒரு மூடி போட்டு மூடி, ஒரு 2 முதல் 3 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். இப்போது இந்த கலவையில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சில நிமிடங்கள் கொதித்த பின்பு, இறுதியக மல்லிதாழியை தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு காளான் மசாலா தயார்!!

Follow Us:
Download App:
  • android
  • ios