ஈவினிங் ஸ்நாக்ஸ் : யம்மியானா ஹாட் & சோர் பாஸ்தா செய்யலாம் வாங்க!
சூப்பரான பாஸ்தாவை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பாஸ்தாவையும் இப்போது நூடுல்ஸ் போன்று அதிகமானோர் செய்து சாப்பிட்டு வருகின்றனர். குறைவான நேரத்தில் ,சுலபமாகவும் சுவையாகவும் செய்யப்படுகிறது.
இத்தாலிய உணவு என்றவுடன் நாம் அனைவருக்கும் முதலில் நினைப்பது பீசா தான்.ஆனால் பீசாவை வெளியில் சென்று, ஆர்டர் கொடுத்து , நீந்திட நேரம் காத்திருந்து , வாங்கி பின் சாப்பிட வேண்டும். அனால் பாஸ்தாவை மிக சுலபமாக வீட்டிலேயே மிக எளிமையாக அதே சமயத்தில் சூப்பரான பாஸ்தாவை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பாஸ்தா - 200 கிராம்
முட்டை - 2
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
தயிர் - 1/4 கப்
குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
கேரட் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளாகாய் - 2 (நீட்டமாக கீரியது)
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 2
இஞ்சி, பூண்டுபேஸ்ட் - 2
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
ஆரோக்கியத்திற்கு அரு மருந்தான கோவக்காய் வறுவல்! ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க!
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் தண்ணீரில் பாஸ்தாவை சேர்த்து,வெந்த பிறகு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு வாணலி வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் கிராம்பு மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொண்டு, பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும்.இப்போது இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.
அனைத்தும் நன்கு வதங்கிய பின்னர் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி, கேரட் சேர்த்து வதக்கி விட்டு ,பின் குடை மிளகாய் சேர்து வதக்கி விட வேண்டும். கலவையில் இப்போது மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். கிளறி விட்ட பின் தயிர் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வருவதை காண முடியும் அந்த சமயத்தில் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்றாக கொத்தி விட்டு பின் கிளறி விட வேண்டும். அனைத்தும் ஒன்றுடன் ஒன்றாக இணையுமாறு கிளறி விட வேண்டும். இறுதியாக வேக வைத்து எடுத்துள்ள பாஸ்தாவை சேர்த்து , நன்றாக பிரட்டி விட வேண்டும். அவ்ளோதான் யம்மியானா ஹாட் & சோர் பாஸ்தா ரெடி!!