ஆரோக்கியத்திற்கு அரு மருந்தான "கோவக்காய் வறுவல்"! ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க!

சத்தான மற்றும் சுலபமாக கோவக்காய் வறுவல் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். 
 

How to make Ivy Gourd Fry in Tamil

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு காய்கறிகளும் ஒவ்வொரு விதமாக நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அதே போல் ஒரே விதமான காய்கறிகளை கொண்டு செய்யும் உணவு வகைகளை செய்து தராமல், சற்று வித்தியாசமாக செய்ய நினைப்பவர்களுக்கு இந்த பதிவு உதவி புரியும் விதமாக இருக்கும். 

அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்களில் ஒன்றான கோவக்காயை வைத்து இன்று நாம் சுவையான ,சத்தான மற்றும் சுலபமாக கோவக்காய் வறுவல் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். 

கோவைக்காயானது காசநோயைப் குணப்படுத்தும் தன்மை பெற்றது . மேலும் சிறுநீர்க பிரச்சனைகள் உள்ளவர்கள் இதனை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொண்டால் விரைவில் நலம் பெறுவார்கள். சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. மேலும் பல மருத்துவ நன்மைகளை தருகின்ற கோவக்காயை வைத்து அசத்தலான சுவையில் கோவக்காய் வறுவல் செய்யலாம் வாங்க!

கோவக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

கோவக்காய் - 1/4 கிலோ 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
கடுகு,-1/4 ஸ்பூன் 
உளுந்து-1/4 ஸ்பூன் 
கடலைப்பருப்பு - 1/4 ஸ்பூன் 
சீரகம்-1/4 ஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 கொத்து 

வறுத்து பொடி செய்ய 

உளுந்து - 1 ஸ்பூன் 
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன் 
காய்ந்த மிளகாய்-3
மல்லி விதைகள் - 1/2 ஸ்பூன் 
துருவிய தேங்காய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

நீர் சத்து அதிகமுள்ள பீர்க்கங்காயை குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்களா?அப்போ இப்படி செய்து தாங்க!

செய்முறை:

முதலில் கோவக்காயை அலசி விட்டு,மெல்லிதாக நீட்ட நீட்டமாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு பான் வைத்து எண்ணெய் சேர்க்காமல், வெறும் கடாயில் கடலைப்பருப்பு,உளுந்தம் பருப்பு ,காய்ந்த மிளகாய் மற்றும் மல்லி விதைகள் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும். இப்போது இதனை ஆறவைத்து கொண்டு, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, நீர் சேர்க்காமல் கொரகொரப்பான பவுடராக அரைத்து கொள்ள வேண்டும். இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கடலைபபருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தளித்துக் கொண்டு, பின் அதில் நறுக்கிய கோவக்காய்ச் சேர்த்து பிரட்டி விட வேண்டும். 

சுமார் 2 நிமிடங்கள் பிரட்டி எடுத்துக் கொண்டு,அதில் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு நீர் தெளித்து ஒரு முறை பிரட்டி விட்டு, கடாயை ஒரு தட்டு போட்டு மூடி விட வேண்டும். நன்கு வெந்த பின் அதிலுள்ள நீர் வற்றிய பிறகு செய்து வைத்துள்ள பொடியினை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். கிளறிய பின் சுமார் 5 நிமிடங்கள் வரை அடுப்பின் தீயனை சிம்மில் வைத்து பிரட்டி எடுத்தால் சுவையான கோவக்காய் வறுவல் ரெடி! சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதத்துடன் தொட்டு சாப்பிட்டால்  சூப்பராக இருக்கும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios