Asianet News TamilAsianet News Tamil

நீர் சத்து அதிகமுள்ள பீர்க்கங்காயை குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்களா?அப்போ இப்படி செய்து தாங்க!

பீர்க்கங்காய் சேர்த்து அடையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். 
 

How to make Ridge Gourd Adai in Tamil
Author
First Published Oct 30, 2022, 10:33 PM IST

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பல வகையான காய்கறிகள் மற்றும் கீரைகளை அன்றாட உணவில் எடுத்து கொள்வது அவசியமாகிறது. என்ன தான் வித்தியாசமாக காய்கறிகளை சமைத்து கொடுத்தாலும், குழந்தைகள் ஒரு சில குறிப்பிட்ட காய்களான பீர்க்கங்காய் , புடலங்காய், பாகற்காய் போன்றவற்றை ஒதுக்கி விடுகிறார்கள். 

அவர்கள் அந்த காய்கறிகளை ஒதுக்காமல் ,அவற்றின் முழு சத்தினை பெற இந்த மாதிரி செய்து கொடுங்கள். என்ன ரெசிபி என்று தெரிய வேண்டுமா? பீர்க்கங்காய் அடை தாங்க இன்று நாம் பார்க்க உள்ள ரெசிபி. 

பீர்க்கங்காய் சேர்த்து அடையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். 

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1/2 குழிக் கரண்டி 
புழுங்கலரிசி - 2 குழிக் கரண்டி 
கொள்ளு - ஒரு கையளவு 
பாசிப்பருப்பு - ஒரு கையளவு 
உளுத்தம் பருப்பு - ஒரு கையளவு 
கடலைப்பருப்பு - 1/2 குழிக் கரண்டி 
துவரம் பருப்பு - 1/2 குழிக் கரண்டி 
பீர்க்கங்காய் - ஒன்று பெரியது
சின்ன வெங்காயம் - 10
மல்லித் தழை - 2 ஸ்பூன் 
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
சோம்பு - ஒரு ஸ்பூன் 
சீரகம் - 1/2 ஸ்பூன் 
தனியா - 2 ஸ்பூன் 
பூண்டு - 5 பல்
பெருங்காயம் - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு 

தாளிப்பதற்கு :

எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 ஸ்பூன் 
கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 கொத்து 

அசத்தலான "மூங்கில் சிக்கன் பிரியாணி" - எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கொள்ளு , அரிசி வகைகள் மற்றும் பருப்பு வகைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு அதனுடன் சீரகம், சோம்பு,,பூண்டு, தனியா,உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து ரவை போன்ற பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

தோல் சீவிய பீர்க்கங்காயை கொஞ்சம் பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். அதே போன்று வெங்காயம் , கறிவேப்பிலையைப் மிக பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தளித்துக் கொள்ள வேண்டும். 

பின் அதில் வெங்காயம், பீர்க்கங்காய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை மற்றும் மல்லித் தழை சேர்த்து வதக்கி விட வேண்டும். வதக்கிய கலவையை மாவுடன் சேர்த்துக் கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து கலந்துக்க கொள்ள வேண்டும், 

அடுப்பில் தோசைக் கல்லை வைத்து காய்ந்த பின், சிறிது எண்ணெய் தடவி மாவை ஊத்தப்பம் போல் ஊற்றி கொண்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு பக்கம் வெந்த பிறகு மறுபக்கம் திருப்பிப் போட்டு, சிறிது எண்ணெய் விட்டு சிவக்க விட்டு எடுத்தால் அருமையான பீர்க்கங்காய் அடை ரெடி!!! இதனை தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் இதன் சுவை வேற லெவலாக இருக்கும்..

Follow Us:
Download App:
  • android
  • ios