Asianet News TamilAsianet News Tamil

சத்தான ஹலீம் கஞ்சி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க!

இன்று நாம் சிக்கன் வைத்து அருமையான ஹலீம் கஞ்சியை வீட்டில் சுலபமாக, சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to Prepare Haleem Kanji in Tamil
Author
First Published Nov 21, 2022, 4:28 PM IST

வழக்கமாக கஞ்சி போன்ற உணவுகளை நாம் உடம்புக்கு முடியாத நேரங்களில் எடுத்துக் கொள்வோம்.கஞ்சி என்றவுடன் அரிசி கஞ்சி, ரவை கஞ்சி, பார்லி கஞ்சி, கொள்ளு கஞ்சி போன்றவை தான் நமக்கு நினைவில் வரும்.என்றாவது சிக்கன் வைத்து சூப்பரான கஞ்சி செய்துள்ளீர்களா? என்ன! சிக்கன் வைத்து கஞ்சியா? என்று நினைக்கிறீர்களா? ஆம். இன்று நாம் சிக்கன் வைத்து அருமையான ஹலீம் கஞ்சியை வீட்டில் சுலபமாக, சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ 
பச்சரிசி - 1/2 கப் (உடைத்தது)
கோதுமை - 1 கப்(உடைத்தது) 
துவரம்பருப்பு - 3/4 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
அவல் - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 
மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 
கரம் மசாலா - 3 ஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் 
தேங்காய் - 1
புதினா - 1/2 கட்டு 
மல்லி- 1/2 கட்டு 
எலுமிச்சைப்பழம் - 1 
எண்ணெய் -தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

சூப்பரான சைனீஸ் செஷ்வான் சிக்கன் கிரேவி செய்து சாப்பிடலாம் வாங்க!

செய்முறை:

முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து அலசி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கோதுமை, அரிசி,பருப்பு ஆகியவற்றை ஒன்றுக்கு மூன்று முறை தண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், தக்காளியை நீளமாக அரிந்து கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ள வேண்டும். புதினா மற்றும் மல்லித்தழையை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் குக்கர் வைத்து அதில் கோதுமை,அரிசி,பருப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி, 4 விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.குக்கரில் சிக்கன் வேகும் நேரத்தில் தேங்காயை துருவி மிக்சி ஜாரில் போட்டு, தேங்காய் பால் எடுத்து ஒரு பௌலில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு வாணலி வைத்து சிறிது நெய் ஊற்றி, நெய் காய்ந்த பிறகு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பின், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட வேண்டும். பின்அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து இரண்டும் மசியும் வரை வதக்கி விட வேண்டும். 

பின் அதில் மிளகாய் தூள்,கரம் மசாலா தூள்,மஞ்சள் தூள், சேர்த்து மசாலா தூள்களின் கார தன்மை போகும் வரை வதக்கி விட்டு,பின் அதில் சிக்கனை போட்டு கொஞ்சம் பிரட்டி விட வேண்டும். சிக்கன் வெந்த பிறகு ,சிக்கனைசிறிது சிறிதாக பிய்த்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு பெரிய பாத்திரம் வைத்து அதில் வேக வைத்த கோதுமை,அரிசி, பருப்பு மற்றும் பிய்த்து எடுத்த சிக்கன் ஆகியவற்றை சேர்த்து வெங்காயம்,தக்காளி கலவையை சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றிக் கொண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விட வேண்டும். 

சிக்கன் நன்கு வெந்த பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க வைக்க விட்டு, கொதித்த பின் அடுப்பை ஆஃப் செய்து விட்டு , லெமன் ஜூஸ் மற்றும் அவல் சேர்த்து பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு ஒரு தட்டு போட்டு மூடி விட வேண்டும். 10 நிமிடங்கள் பிறகு, மல்லித்தழை மற்றும் புதினா சேர்த்து 1 முறை பிரட்டி விட்டு சுட சுட பரிமாறினால் ஹலீம் கஞ்சி ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios