Asianet News TamilAsianet News Tamil

சூப்பரான சைனீஸ் செஷ்வான் சிக்கன் கிரேவி செய்து சாப்பிடலாம் வாங்க!

இன்று நாம் சூப்பரான சைனீஸ் செஷ்வான் சிக்கன் கிரேவி வீட்டில் சுலபமாக எப்படி செய்வது செய்வது என்று பார்க்கலாம் வாங்க

How to cook Schezwan Chicken Gravy in Tamil
Author
First Published Nov 20, 2022, 9:06 AM IST

வழக்கமாக செய்த சிக்கன் ரெசிபிக்களான சிக்கன் 65, சிக்கன் லாலி பாப், சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் டிஃபரென்டான சுவையில் சிக்கனனை செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது. இன்று நாம் சைனீஸ் முறையில் ஒரு சுவையான செஷ்வான் சிக்கன் ரெசிபியை காண உள்ளோம். 

இந்த சைனீஸ் செஷ்வான் சிக்கன் கிரேவி பரோட்டா, நாண், சப்பாத்தி, புல்கா போன்றவற்றிக்கு சிறந்த காம்போவாக இருக்கும். இதனை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் சுவையில் சூப்பராக இருக்கும். இன்று நாம் சூப்பரான சைனீஸ் செஷ்வான் சிக்கன் கிரேவி வீட்டில் சுலபமாக எப்படி செய்வது செய்வது என்று பார்க்கலாம் வாங்க

தேவையான பொருட்கள்:

போன்லெஸ் சிக்கன் -1/4 கிலோ 
இஞ்சி - 1 இன்ச் 
பூண்டு - 2பற்கள் 
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
கேப்ஸிகம் - 1
சோயா சாஸ் - ஒரு ஸ்பூன் 
செஷ்வான் சாஸ் - 4 ஸ்பூன் 
கார்ன் ஃப்ளார் - ஒரு ஸ்பூன்
மைதா - ஒரு ஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மல்லித் தழை-கையளவு 

செய்முறை:

முதலில் வெங்காயம் மற்றும் கேப்ஸிகத்தை ஒரே மாதிரியான வடிவத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டினை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு கிண்ணத்தில் கார்ன் ஃப்ளார் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி, கரைசல் செய்து கொள்ள வேண்டும். 

சிக்கனைஅலசி விட்டு, பின் சிறிய மெல்லிய பீஸ்களாக வெட்டிக் கொண்டு அதில் மைதா மாவு,பச்சை மிளகாய்,சோயா சாஸ், சிறிது இஞ்சி, சிறிது பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டிக் கொண்டு,அதனை சுமார் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து,அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், ஊறிய சிக்கன் துண்டுகளை அதில் போட்டு(அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து விட்டு)பொரித்து எடுத்துக் கொண்டு, எண்ணெய் இல்லாமல் வடித்துக் கொள்ள வேண்டும். 

பின் அதே கடாயில் மீதமுள்ள வெட்டிய பூண்டு, இஞ்சி சேர்த்து தாளித்து விட்டு, அதில் வெங்காயம் மற்றும் கேப்ஸிகம் சேர்த்து 2 நிமிடங்கள் வரை வதக்கி விட்டு, பின் செஷ்வான் சாஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

அனைத்தும் நன்றாக கலந்த பின்னர், பொரித்து வைத்துள்ள சிக்கன் பீஸ்களை சேர்த்து மீண்டும் நன்றக கலந்து விட வேண்டும்.இப்போது கார்ன் ஃப்ளார் கரைசலை ஊற்றி விட்டு, கொஞ்சம் கிளறி விட்டு இறக்கி விட வேண்டும். இறுதியாக மல்லித்தழையை தூவினால் செஷ்வான் சிக்கன் கிரேவி ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios