சைனீஸ் முறையில் ஸ்பைசியான சூப்பரான நண்டு மசாலா!

அசைவ உணவுகளில் ஒன்றான நண்டினை வைத்து சூப், கிரேவி, குழம்பு என்று பல வகையான உணவுகளை சுவைத்து இருப்பீர்கள். இன்று நாம் சைனீஸ் முறையில் காரசாரமான நண்டு மசாலா செய்ய உள்ளோம். 
 

How to prepare Chinese Style Spicy Crab Masala in Tamil

நண்டானது உடலில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தி , முகத்தில் பருக்கள்தோன்றாமல் இருக்க வழிவகை செய்யும். மேலும் சளி , இருமல் போன்ற தொல்லை உள்ளவர்கள் அவ்வப்போது நண்டினை உணவில் எடுத்துக் கொண்டால், நிரந்தர தீர்வு கிடைக்கும்.

ஸ்பைசியான நண்டு மசாலா எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

நண்டு - 1/2 கிலோ
முட்டை - 1 
தக்காளி - ஒரு கப் (பொடியாக நறுக்கியது ) 
மிளகாய் விழுது - 2 ஸ்பூன் 
பூண்டு -5 பற்கள் 
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
கார்ன் பிளார் - 2 ஸ்பூன் 
சர்க்கரை - 1 ஸ்பூன் 
வினிகர் - 2 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு 

ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் "பன்னீர் பீஸ் மசாலா" - இப்படி செய்து பாருங்க. கொஞ்சம் கூட மீதம் இருக்காது!

செய்முறை:

முதலிய நண்டை சுத்தம் செய்து , ஓடு தண்ணீரில் கழுவிக் கொண்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டினை மிகப் பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். தக்காளியை மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.வர மிளகாயை வெதுவெதுப்பான தண்ணீரில் சுமார் 20 நிமிடங்கள் ஊற வைத்துக் கொண்டு, விதைகளை நீக்கி விட்டு தோல்களை மாட்டும் மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடான பின் பொடியாக நறுக்கிய பூண்டினைப் சேர்த்து வதக்கி கொண்டு, பின் அதில் மிளகாய் விழுதினைச் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அடுத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட வேண்டும். 

தண்ணீர் கொதிக்கும் போது அதில் சுத்தம் செய்து கழுவி வைத்துள்ள நண்டுகளைப் போட்டு வேகவிட வேண்டும். நண்டு துண்டுகள் முழுவதுமாக நனையும் அளவிற்கு தண்ணீரின் அளவு இருக்க வேண்டும். 

பின் அதில் சர்க்கரை,அரைத்த தக்காளி விழுது, வினிகர் , உப்பு மற்றும் அஜினோமோட்டோ சேர்த்து வேகவிட வேண்டும். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பிறகு ,கலவை கெட்டியாக மாறும் நேரத்தில் கார்ன் பிளார் சேர்த்து கலக்கி விட வேண்டும். 

இப்போது முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி முட்டையை நன்கு அடித்து விட்டு, அதையும் குழம்பில் சேர்த்து விட வேண்டும். குழம்பு கெட்டியாகும் போது அடுப்பினை ஆஃப் செய்து விட்டு இறக்கி விட வேண்டும். அவ்ளோதாங்க சுவையான ஸ்பைசியான நண்டு மசாலா ரெடி.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios