ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் "பன்னீர் பீஸ் மசாலா" - இப்படி செய்து பாருங்க. கொஞ்சம் கூட மீதம் இருக்காது!

ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் ஒரு கிரேவியை இப்படி செய்து பாருங்க. கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அசத்தலாக இருக்கும். 

how to cook paneer peas masala recipe in tamil

பன்னீர் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? பனீருடன் பட்டாணி சேர்த்து அருமையான , ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் ஒரு கிரேவியை இப்படி செய்து பாருங்க. கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அசத்தலாக இருக்கும். இதனை சப்பாத்தி, நாண் போன்றவற்றிக்கு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். வாங்க! இதனை வீட்டிலேயே சுவையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 1 கப்
பட்டாணி - 1/2 கப் 
வெங்காயம் – 1
தக்காளி - 2 
சோம்பு - 1/4 ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 
கஸ்தூரி மேத்தி -1 ஸ்பூன் 
பட்டர்-2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

சில்லென்று பெய்யும் மழையில் சுட சுட "வரகு சேமியா சீஸ் பால்ஸ்" செய்து சாப்பிடுங்க!

செய்முறை:

முதலில்  வெங்காயத்தை மெல்லியதாக வெட்டிக் கொண்டு, தக்காளி பழத்தை மிக்சி ஜாரில் போட்டு தக்காளி பல்ப் செய்து கொண்டு ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் சோம்பு சேர்த்து வறுத்துக் கொண்டு பின் அதில் வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட வேண்டும். வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கிய பின், அதில் இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து மீண்டும் வதக்கி விட வேண்டும். 

இஞ்சி பூண்டின் பச்சை வாசனை சென்ற பிறகு, அதில் பட்டாணி சேர்த்து வதக்கி விட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும் . பின்பு, தக்காளி பல்ப்பை சேர்த்து, அதனுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து ,கொதிக்க வைக்க வேண்டும் .

அதே நேரத்தில் மற்றொரு அடுப்பில் ஒரு பான் வைத்து சிறிது பட்டர் சேர்த்து , பட்டர் உருகிய பின், தீயினை சிம்மில் வைத்து பன்னீர் பீஸ்களை போட்டு பொரித்து எடுத்துக் கொண்டு அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். 

பீஸ் மசாலா கலவையில் எண்ணெய் பிரிந்து வரும் போது, அதில் பன்னீர் பீஸ்களை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து இறக்கி விட்டு, பின் அதில் கஸ்தூரி மேத்தியை தூவினால் அருமையான அசத்தலான ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் பன்னீர் பீஸ் மசாலா ரெடி!!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios