உடல் வலிமை பெற உதவும் கோதுமை கொழுக்கட்டை இன்றே செய்து சுவைத்து பாருங்கள்!
பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்னாக்ஸாகவும் இதனை தரலாம். கோதுமை கொழுக்கட்டை எப்படி வீட்டில் செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்
பொதுவாக நாம் அரிசி மாவு, ராகி மாவு சேர்த்து தான் கொழுக்கட்டையை செய்வோம். சற்று மாற்றமாக இன்று நாம் கோதுமை மாவு பயன்படுத்தி கொழுக்கட்டை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த கொழுக்கட்டையை மாலை டீ அல்லது காபி அருந்தும் போது வடை மற்றும் சமோசாவிற்கு மாற்றாக இதனை எடுத்துக் கொள்ளலாம். அல்லது சிற்றுண்டியாகவும் எடுத்துக் கொள்ளலாம். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்னாக்ஸாகவும் இதனை தரலாம். இதனை எப்படி வீட்டில் செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உடைந்த கோதுமை 1/2 கப்
அரிசி மாவு- 4 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 5 ஸ்பூன்
வெல்லம் -6 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
நெய் -தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
சுவையான பாம்பே ஹல்வா 10 நிமிஷத்தில் செய்து அசத்தலாம் வாங்க!
செய்முறை:
முதலில் உடைந்த கோதுமையை சுத்தம் செய்து பின் நன்றாக கழுவி கொண்டு , வெதுவெதுப்பான நீரில் போட்டு கிட்டதட்ட 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் கோதுமையை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி விட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். வடிகட்டிய உடைந்த கோதுமை, துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து ஒரு மிக்சர் ஜாரில் போட்டு இரண்டு சுற்று சுற்றி கொண்டு, பின் அதில் சிறிது அரிசி மாவு சேர்த்து மீண்டும் 2 சுற்று சுற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது, அரைத்த மாவினை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் துருவிய வெல்லம், துருவிய தேங்காய் சிறிது ஏலக்காய் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பூரணம் ரெடி செய்து கொள்ள வேண்டும். கையில் சிறிது எண்ணெய் தடவி விட்டு, மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். உருண்டைகளை விரல்கள் வைத்து மெதுவாக தட்டி, விளிம்புகளை மெல்லியதாகவும், மையத்தை கொஞ்சம் தடிமனாகவும் செய்து விட வேண்டும்.
இப்போது பூரணத்தை உள்ளே வைத்து மாவை மடித்து விளிம்புகளை மூடி விட வேண்டும். அனைத்து மாவினையும் இதே போல் செய்து கொழுக்கட்டைகளை தயார் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது இட்லி பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் இட்லி தட்டுகளின் மேல் சிறிதுநெய் தடவி, இந்த கொழுக்கட்டைகளை அதன் மேல் வைத்து இட்லி பத்திரத்தை மூடி வைத்துமிதமான தீயில் வைத்து சுமார் 15 நிமிடங்கள் வரை வேக வைத்து பின் அடுப்பினை ஆஃப் செய்து விட்டு, ஒரு 10 நிமிடங்கள் கழித்து இட்லி பாத்திரத்தை திறந்தால் நெய் மணம் கமழும் கோதுமை கொழுக்கட்டை ரெடி!!!