கத்திரிக்காயா! என்று முகம் சுளிப்பவர்கள் கூட, இப்படி செய்து கொடுத்தால், கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
வாருங்கள்! சுவையான கத்திரிக்காய் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது எப்படி என்று இந்த பதிவின் கொள்ளலாம்.
ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினமும் நாம் அதிக அளவிலான காய்கறிகள் ,கீரைகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் என்றவுடன் பலரும் உருளை, பீன்ஸ்,கேரட்,கோஸ் ,முருங்கை போன்ற ஒரு சில காய்கறிகளையே மீண்டும் மீண்டும் சமைத்து சாப்பிடுவார்கள்.இப்படி ஒரே மாதிரியான காய்கறிகளையே சாப்பிடாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் நம்மில் பலரும் ஒரு சில காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள தயங்குகிறோம். அதில் ஒன்று தான் கத்திரிக்காய் . கத்திரிக்காய் என்றால் பலரும் கத்திரிக்காயா? என்று சற்று வித்தியாசமான தோரணையில் கேட்பார்கள். சிலர் கத்திரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும், அரிப்பு உண்டாகும் என்று பல விதமான கருத்துகக்ளை சொல்வார்கள். ஆனால் கத்திரிக்காய் மனித உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை தருகிறது.
கத்திரிக்காயா? என்று முகம் சுளித்து / சலித்து சாப்பிடுபவர்களுக்கு இப்படி 1 முறை கத்திரிக்காயை செய்து கொடுங்க. பின் அவர்களே இதனை எப்படி செய்வது என்று உங்களிடம் கேட்பார்கள். வாருங்கள்! சுவையான கத்திரிக்காய் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது எப்படி என்று இந்த பதிவின் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்-1/4 கிலோ
வெங்காயம்-1/2
மிளகு-1 ஸ்பூன்
சீரகம்-1 ஸ்பூன்
வர மிளகாய்-5
பூண்டு-3 பற்கள்
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
முதலில் கத்திரிக்காயை அலசி விட்டு மெல்லிதாக அரிந்து தண்ணீரில் போட்டுக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் மிளகு, சீரகம்,பூண்டு மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து லேசாக வாசனை வரும் வரை வறுத்துக் கொண்டு அதனை ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆறிய பிறகு, ஒரு மிக்சி ஜாரில் வெங்காயம் மற்றும் வறுத்த கலவையை சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் அரிந்து வைத்துள்ள கத்திரிக்காய் சேர்த்து சிறிது உப்பு தூவி நன்றாக வதக்கி விட வேண்டும்.
கத்தரிக்காய் ஓரளவு வதங்கிய பின்னர், அரைத்த மசாலா சேர்த்து இரண்டு முறை பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் தெளித்து ஒரு தட்டு போட்டு மூடி விட வேண்டும். மசாலாவில் பச்சை வாசனை சென்று, தண்ணீர் முழுதும் வற்றி இருக்கும் போது கத்திரிக்காய் நன்கு வெந்து காணப்படும். அவ்ளோதான் சூப்பரான கத்திரிக்காய் மிளகு வறுவல் ரெடி! நீங்களும் ஒரு முறை இதனை செய்து அசத்துங்க!
விலை தான் மலிவு!ஆனால் ஆரோக்கியத்தில்? இத்தனை நன்மைகள் தரும்போது 1 செவ்வாழை கூட சாப்பிடாம இருக்கலாமா?