நாள் முழுவதும் எனர்ஜியா இருக்க "பீட்ரூட் மசால் தோசை" சாப்பிடுங்க
சத்தான பீட்ரூட் தோசையை வீட்டில் சுவையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதியவன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மசால் தோசை என்றவுடன் நாம் அனைவருக்கும் நினைவில் வருவது உருளைக்கிழங்கு வைத்து செய்யப்படும் மசாலா தோசை தான். அதன் சுவையே அலாதி தான். அதே போன்று பீட்ரூட் வைத்தும் மசால் தோசை செய்ய முடியும். இதனை செய்து சாப்பிட்டு இருக்கீங்களா? இல்லையா? அப்படியென்றால், இந்த பதிவை பார்த்து நீங்களும் பீட்ரூட் மசால் தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். நாள் முழுவதும் எனர்ஜியா இருக்க சத்தான "பீட்ரூட் மசால் தோசை" சாப்பிடுங்க.
பீட்ரூட் போன்ற காய்கறிகளை கொஞ்சம் டிஃபரென்டாக இந்த மாதிரி, செய்து கொடுத்தால், குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சத்தான பீட்ரூட் தோசையை வீட்டில் சுவையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதியவன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2
உருளைக்கிழங்கு -1
கேரட் - 1 (துருவியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறு
கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி - 1 ஸ்பூன்
பூண்டு - 2 பற்கள் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
அவரைக்காய் பருப்பு கூட்டு இப்படி செய்து அசத்துங்க !
செய்முறை:
முதலில் காய்கறிகளை நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து, அதில் பீட்ரூட், கேரட் மற்றும் உருளைக்கிழங்கு போட்டு, தண்ணீர் ஊற்றி மூடி விட்டு, 2 விசில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். குக்கர் விசில் அடங்கிய பிறகு, காய்கறிகளின் தோலினை எடுத்துவிட்டு ஒரு கிண்ணத்தில் போட்டு காய்கறிகளை மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த கிண்ணத்தில் உள்ள மசித்த காய்கறிகளுடன் சிறிது உப்பு தூவி நன்றாக கலந்து , பின் பிசைந்து விட வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து , எண்ணெய் ஊற்றி சூடான பின், எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்து விட்டு, பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு, துருவி வைத்துள்ள இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொண்டு, மசித்து வைத்துள்ள காய்கறிகளையும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
இப்போது கலவையில் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, விட்டு ,தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்துக் கொண்டு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து, தோசைக்கல் சூடான பின், தோசை மாவினை தோசையாக ஊற்றி, இந்த பீட்ரூட் மசாலாவை வைத்து ஸ்ப்ரெட் செய்து விட்டு, சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி, தோசை வெந்த பின் ரோல் போன்று மடித்து விட்டு பரிமாறினால் சத்தான பீட்ரூட் மசாலா தோசை ரெடி!