லஞ்சிற்கு கேரளா ஸ்டைலில் தீயல் செய்து பாருங்க!சூடான சாதமும் இது மட்டும் போதும்.கப்சிப் என்று அனைத்தும் காலி!

வாருங்கள்! கேரளாவின் ஸ்பெஷல் தீயல் ரெசிபியை வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
 

How to Prepare a Delicious Kerala Style Theeyal Recipe


தினமும் என்ன சமையல் செய்வதென்பதே வீட்டிலுள்ள பெண்களின் கவலையாக இருக்கும். ஒரே மாதிரியான பருப்பு, சாம்பார், ரசம்,குழம்பு என்று செய்து கொடுத்தாசலித்துக் கொண்டு தான் சாப்பிடுவார்கள்.

எனவே இன்று மதியம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு வத்த குழம்பு ரெசிபியை செய்து கொடுங்கள். இந்த வத்தக் குழம்பை சற்று வித்தியாசமான சுவையிலும் , கேரளாவின் ஸ்டைலிலும் செய்ய உள்ளோம். இதற்கு கேரளாவில் தீயல் என்றழைப்பார்கள். இதனை செய்யும் பொழுதே வீட்டில் உள்ளவர்கள் என்ன சமைக்கிறீர்கள் என்று கேட்கும் அளவிற்கு இதன் மணம் இருக்கும். தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.

வாருங்கள்! கேரளாவின் ஸ்பெஷல் தீயல் ரெசிபியை வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 10
தேங்காய் – ஒரு மூடி
வெந்தயம்- 1/ 4ஸ்பூன்
சோம்பு-1/4 ஸ்பூன்
தனியாதூள் – 2 ஸ்பூன்
மிளகாய்தூள் 2 ஸ்பூன்
புளி – சிறிய உருண்டை
கடுகு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிட்டிகை
உளுந்தம் பருப்பு- 1/4 ஸ்பூன்
கடலைப்பருப்பு-1/4 ஸ்பூன்
கருவேப்பிலை- 1 கொத்து
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் –தேவையான அளவு

முகத்தை எப்போதும் ஃபிரெஷா, க்ளியர் ஸ்கின்னாக வச்சுக்க தினமும் இதை செய்யுங்க!

செய்முறை:

முதலில் தேங்காயை துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை உரித்து ஒன்றுக்கு இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். புளியை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி புளிக்கரைசல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். தேங்காய் பொன்னிறமாக மாறிய பின், அதனை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து பின் அதனை மிக்சி ஜாரில் சேக்க வேண்டும். அதனுடன் தனியா தூள், மிளகாய் தூள், ஆகியவை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி , எண்ணெய் சூடான் பின் அதில் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்து பின் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறிய பிறகு, கெட்டியான புளி கரைசல் ஊற்றி சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். ஒரு கொத்தி வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து மிக்ஸ் செய்து விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

குழம்பு கெட்டியாக மாறிய பிறகு, அடுப்பில் இருந்து இறக்கினால், கேரள மாநிலத் தீயல் எனும் வத்தல் குழம்பு ரெடி!.சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் வேறு எதையும் தேட மாட்டார்கள்.நீங்களும் இதனை ஒரு முறை ட்ரை செய்து பாருங்க.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios