Asianet News TamilAsianet News Tamil

குட்டிஸ்களின் பேவரைட் க்ரிஸ்பி "சால்ட் & ஸ்வீட் பிஸ்கட்"!

நீரழிவு நோய் உள்ளவர்கள், முதியவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற இந்த வீட் சால்ட் பிஸ்கட்டை சுவையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How to make Wheat and Salt biscuits in Tamil
Author
First Published Dec 6, 2022, 1:18 PM IST

வழக்கமாக நாம் பிஸ்கட் மற்றும் குக்கீஸ் போன்றவற்றை கடைகளில் இருந்து தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். இனி நாம் வீட்டிலிலேயே சத்தாகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் செய்யலாமா? 

பொதுவாக கடைகளில் விற்கப்படுகின்ற பிஸ்கட்கள் மைதா மாவினை சேர்த்து செய்வார்கள். இன்று நாம் உடலுக்கு சத்து தருகின்ற கோதுமை வைத்து பிஸ்கட் செய்ய உள்ளோம். 

இந்த பிஸ்கட் கோதுமையில் சேர்த்து செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற பிஸ்கட் என்றே சொல்லலாம். காலை மற்றும் மாலை டீ அல்லது காபி பருகும் போது இந்த பிஸ்கட்டும் சேர்த்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும். 

மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் பாக்ஸில் கூட கொடுத்து அனுப்பலாம். நீரழிவு நோய் உள்ளவர்கள், முதியவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற இந்த வீட் சால்ட் பிஸ்கட்டை சுவையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு- 1கப்
சர்ககரை-1/4கப் 
பட்டர் -1/2கப் 
ஓமம் - 1/2 ஸ்பூன் 
உப்பு-2 சிட்டிகை 
பால்-50மில்லி 

ஈவினிங் ஸ்னாக்ஸிற்கு மொறுமொறுப்பான வெங்காய வடை செய்யலாம் வாங்க!

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு சிறிய பான் வைத்து பட்டர் சேர்த்து உருக வைக்க வேண்டும். சர்க்கரையை மிக்சி ஜாரில் போட்டு பவுடர் போல் செய்து கொள்ள வேண்டும். ஓமத்தை கசக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கோதுமை மாவினை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தட்டில் ஒரு பட்டர் பேப்பர் போட்டு சிறிது எண்ணெய் தடவி வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு பத்திரத்தில் உருகிய பட்டரை போட்டு அதில் பொடித்து வைத்துள்ள சர்க்கரை மற்றும் ஓமம் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். சலித்து வைத்துள்ள கோதுமை மாவினை சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது அனைத்தும் ஒன்றாக கலந்த பின்னர் சிறுக சிறுக பால் தெளித்து பிஸ்கட் செய்யும் பதத்திற்கு மாவினை பிசைந்து கொள்ள வேண்டும். (மிக கடினமாக அதே நேரத்தில் இலகுவாக இருத்தல் கூடாது) பிசைந்த மாவினை சுமார் 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து விட வேண்டும். 

15 நிமிடங்கள் கழிந்த பிறகு, மாவினை பட்டர் பேப்பர் போட்ட தட்டில் மாற்றி விடவேண்டும். மாவின் மேல் இன்னொரு பட்டர் பேப்பர் வைத்து மூடி சப்பாத்தி கட்டையால் தேய்த்து கொள்ள வேண்டும். இப்போது விருப்பமான வடிவங்களில் வெட்டிக் கொள்ள வேண்டும். (பல் குச்சி பயன்படுத்தி சின்ன சின்ன ஹோல்ஸ் போட்டுக் கொள்ளலாம்)

அடுப்பில் 1 கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, ஸ்டாண்ட் வைத்து மூடி விட்டு தீயினை சிம்மில் எண்ணையை கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் நன்றாக சூடான பின்னர், பிஸ்கட் வெட்டி வைத்துள்ள தட்டினை உள்ளே வைத்து (தீயை சிம்மிலேயே வைத்து) சுமார் 1/2 மணி நேரம் வரை வைத்து வேக வைக்க வேண்டும். 

வேக வைத்து எடுத்த பின், பிஸ்கட்டை ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஆறிய பிறகு பிஸ்கட் ஆனது சால்ட் அண்ட் ஸ்வீட்டாக இருக்கும். அவ்ளோதாங்க சூப்பரான க்ரிஸ்பி சால்ட் அண்ட் ஸ்வீட் பிஸ்கட் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios