Asianet News TamilAsianet News Tamil

ஈவினிங் ஸ்னாக்ஸிற்கு மொறுமொறுப்பான வெங்காய வடை செய்யலாம் வாங்க!

வடையில் பருப்பு வடை, மெது வடை, கீரை வடை ,மசாலா வடை என்று பல விதமான வடை செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் சற்று மாற்றாக வெங்காயம் வைத்து சூப்பரான மொறுமொறுவான வெங்காய வடை எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம் வாங்க. 

How to make Onion Vadai in Tamil
Author
First Published Dec 4, 2022, 5:20 PM IST

நம்மில் அதிகமானோர் மாலை நேரங்களில் ஏதோ ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றோம். வழக்கமாக நாம் ஈவினிங் ஸ்னாக்ஸாக வடை, போண்டா, பஜ்ஜி என்று செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று நாம் வடையின் 1 வகை தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். 

வடையில் பருப்பு வடை, மெது வடை, கீரை வடை ,மசாலா வடை என்று பல விதமான வடை செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் சற்று மாற்றாக வெங்காயம் வைத்து சூப்பரான மொறுமொறுவான வெங்காய வடை எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம் வாங்க. 

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்
அரிசி மாவு - 1 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2 
இஞ்சி - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து 
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு --தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

கும்பகோணம் கடப்பா இப்படி செய்து பாருங்கள்! - சுவையோ சுவை!

செய்முறை:

முதலில் இஞ்சி,பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 
பின் அரிந்த அனைத்தையும் ஒரு பௌலில் போட்டு நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பின் அதில் கறிவேப்பிலை , உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். 

பின் அந்த பௌலில் அரிசி மாவு, மைதா ,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,பேக்கிங் சோடா,பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசைந்துக் கொண்டு, மாவினை சுமார் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் சூடான பின்,மாவினை கையில் கொஞ்சம் எடுத்து வடை போல் தட்டி, கொதிக்கும் எண்ணெயில் போட்டு தீயினை சிம்மில் வைத்து விட வேண்டும்.  வடை நன்கு பொன்னிறமாக வந்த பின்னர், மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான மொறுமொறுப்பான வெங்காய வடை ரெடி!!!

இதனை தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் இதன் சுவை இன்னும் சூப்பராக இருக்கும். ஒரு முறை இதனை ட்ரை பண்ணி பாருங்க!

Follow Us:
Download App:
  • android
  • ios