Dry Fish Gravy : கமகமக்கும் கிராமத்து கருவாட்டு குழம்பு!
இதன் மணமானது அந்த தெரு முழுவதும் சுண்டி இழுக்கும் அளவிற்கு இருக்கும் என்றால் ,சுவை எப்படி இருக்கும்? ருசியான கிராமத்து கருவாட்டு குழம்பு எப்படி செய்வது என்று இன்றைய பதின் மூலம் தெரிந்து கொள்வோம்.
சண்டே என்றாலே அசைவம் தான் .அதிலும் குறிப்பாக மட்டன், சிக்கன் தான் செய்ய வேண்டுமா என்ன? ஒரு மாற்றத்திற்கு கருவாட்டு குழம்பு செய்வோமா? பிறகு ஒவ்வொரு வாரமும் இதையே செய்ய சொல்லும் அளவிற்கு இதன் மனமும் சுவையும் இருக்கும்.
இன்றும் தென் தமிழகத்தில் அதிகமானோர் கருவாட்டு குழம்பை விரும்பி சமைக்கிறார்கள்.அது உடலுக்கு நல்லதும் கூட. இதன் மணமானது அந்த தெரு முழுவதும் சுண்டி இழுக்கும் அளவிற்கு இருக்கும் என்றால் ,சுவை எப்படி இருக்கும்? ருசியான கிராமத்து கருவாட்டு குழம்பு எப்படி செய்வது என்று இன்றைய பதின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள்:
4 துண்டுகள்- வஞ்சிர கருவாடு அல்லது வேறு ஏதேனும்
1- தக்காளி
1- பச்சை மிளகாய்
நெல்லிக்காய் அளவு- புளி
1/2 ஸ்பூன் - மஞ்சள் தூள்
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்து அரைக்க :
4 -வர மிளகாய்
3 ஸ்பூன் -தனியா விதை
1 ஸ்பூன் -மிளகு
1 ஸ்பூன் - சீரகம்-
2 பல் -பூண்டு
Egg 65 : சிக்கன் 65 தெரியும். முட்டை 65! தெரியுமா?
அரைப்பதற்கு :
4 ஸ்பூன் -தேங்காய் துருவல்
10-சின்ன வெங்காயம்
தாளிப்பதற்கு:
3 ஸ்பூன் -நல்லெண்ணெய்
1/2 ஸ்பூன் -கடுகு
1/4 ஸ்பூன் -வெந்தயம்
6- சின்ன வெங்காயம்
ஒரு கொத்து -கறிவேப்பிலை
செய்முறை:
தண்ணீரில் கருவாடு துண்டுகளை சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். தக்காளியைபொடியாக நறுக்கி கொண்டு,பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.அடுப்பில் கடாயை வைத்து சூடானதும், எண்ணெய் சேர்க்காமல் வர மிளகாய்,பூண்டு,தனியா விதை, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து வறுத்து எடுத்து, ஆறிய பின் மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து துருவிய தேங்காய்,சின்ன வெங்காயத்தை சேர்த்து மிக்சி ஜாரில் தனியாக அரைத்துக் கொள்ளவும்.அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் சேர்த்து,எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போட்டு தாளித்து,பின் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.பின் கருவேப்பிலை வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின் தக்காளி சேர்த்து தக்காளி மசிந்த பிறகு, புளித் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.
சுவையான கேரள வாழை இலை மீன்! செய்வது எப்படி?
இப்போது அரைத்து எடுத்து வைத்துள்ள மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். பச்சைவாசனை சென்றவுடன் அரைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும். இறுதியாக கருவாடை சேர்த்து கருவாடு துண்டுகள் வேகும் வரை கொதிக்க விடவும். கருவாட்டு உப்பு இருப்பதால் , தேவைப்பட்டால் மட்டும் சிறிது உப்பை சேர்த்துக் கொள்ளவும். குழம்பு கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கவும். கமகமக்கும் சுவையான கிராமத்து கருவாட்டு குழம்பு ரெடி!