Vatha Kulambu : மணமணக்கும் கல்யாண வீட்டு வத்தக் குழம்பு செய்வோமா?

வத்தக் குழம்பும் சுட்ட அப்பளம் கூட போதும் என்பார்கள் - சைவ பிரியர்கள். அந்த வகையில் வத்தக் குழம்பின் சுவை அருமையாக இருக்கும். 

How to make Vathak Kulambu in Tamil

பல வகையான வத்தல் குழம்பு உண்டு. பாவக்காய் வத்தல், கத்தரிக்காய் வத்தல் ,சுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல் மற்றும் மாங்காய் வத்தல் என பலவற்றை சேர்த்து வத்த குழம்பு செய்யலாம். 

வத்தல் என்பது நமக்கு பிடித்த காயை உப்பு சேர்த்து மோரில் ஊறவைத்து 4 – 5 நாட்களுக்கு வெயிலில் உலர்த்தி எடுத்து அதனை சுத்தமான மற்றும் காற்று புகாத டப்பாவில் போட்டு 6 மாதம் முதல் 1 வருடம் வரை கூட வைத்து உபயோகிக்கலாம். இந்த மாதிரி காய்கறிகளை வத்தல் செய்து குழம்பு செய்யும் போது அதன் சுவை சற்று தூக்கலாக மற்றும் அசத்தலாகவும் இருக்கும். 

இன்று நாம் சுண்டக்காய் வத்தல் சேர்த்து வத்தக் குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

வட இந்தியாவில் பிரசித்தி பெற்ற ஆலூ பரோட்டா செய்யலாம் வாங்க!

வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 50ml
சுண்டைக்காய் வத்தல் – ¼ கப் 
வெள்ளைப் பூண்டு – 50g (தோல் உரித்த்து)
சின்ன வெங்காயம் – 100g
தக்காளி – 2
புளி – நெல்லிக்காய் அளவு
கருவேப்பிலை – ஒரு கொத்து 
கடுகு – ½ தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
சீரகத்தூள் – ½ தேக்கரண்டி
வெந்தயம் – ¼ தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – சிறிதளவு

செய்முறை:

சுண்டக்காய் வத்தலை வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.  ஒரு Pan இல் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும்,வெந்தயம், கடுகு, சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் தோல் உரித்த வெள்ளைப் பூண்டை சேர்த்து, பூண்டு நன்றாக வதங்கிய பின் சின்னவெங்காயத்தை சேர்த்து சாஃப்டாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

சுவையான சைதாப்பேட்டை ஸ்பெஷல் வடை கறி வீட்டிலேயே செய்வவோமா?

தக்காளியை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக்கொண்டு, அதனை வெங்காயம் மற்றும் பூண்டு வதக்கிய கலவையில் சேர்த்து வதக்கி விட வேண்டும். தக்காளியின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட்டு பின் சிறிது உப்பு, சீரகத்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஓரளவு வதங்கிய பின் புளி தண்ணீர் மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கொண்டு மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும்.

பின்னர் ஊற வைத்து எடுத்துள்ள சுண்டைக் காய்களை நீர் வடித்து விட்டு குழம்பில் சேர்த்துக் மீண்டும் மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரையில் கொதிக்க விட வேண்டும். அவ்வப்போது கிளறி கொண்டே இருக்க வேண்டும்.குழம்பு நன்கு கொதித்து கெட்டியான பின் சிறிது வெல்லம் சேர்த்து தீயை குறைவாக வைத்து 2 நிமிடங்கள் வைக்கவும். அவ்ளோதாங்க மணமணக்கும் வத்தக்குழம்பு ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios