Asianet News TamilAsianet News Tamil

தஞ்சை ஸ்பெஷல் தவல அடை செய்து சுவைத்து மகிழலாம் வாங்க!

இன்று நாம் தஞ்சாவூர் ஸ்டைலில் சூப்பரான தவல அடையை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .

How to make Thanjavur Tavala Adai in Tamil
Author
First Published Dec 8, 2022, 8:05 PM IST

தினமும் மாலை நேரங்களில் நாம் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ் வகைகளில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக ஒரு ஸ்னாக்ஸ் செய்ய சாப்பிட வேண்டும் என்றால் இந்த ரெசிபியை ட்ரை பண்ணலாம். 

ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு விதமான சமையல் முறை இருக்கும். அந்த வகையில் இன்று நாம் தஞ்சாவூர் ஸ்டைலில் அசத்தலான ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை காண உள்ளோம். 

இன்று நாம் தஞ்சாவூர் ஸ்டைலில் சூப்பரான தவல அடையை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1/4 முடி 
சீரகம் - 1/2 ஸ்பூன்
மிளகு - 3/4 ஸ்பூன்
கடுகு - 3/4 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் அரிசி மற்றும் பருப்பினை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவி, பின் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். தேங்காயை துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 3 மணி நேரம் கழித்து பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை வடி கட்டி விட்டு, ஒரு மிக்சி ஜாரில் மாற்றிக் கொள்ள வேண்டும். பின் மிக்சி ஜாரில் மிளகு, சீரகம் மற்றும் உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து,அதில் எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். எண்ணெய் சூடான பின் கடுகு, உளுத்தம் பருப்பு,பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் கடாயில் அரைத்து வைத்துள்ள மாவினை சேர்த்து அதில் உள்ள தண்ணீர் முழுவதும் வற்றி நன்றாக வேக வைக்க விட்டு, அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். 

பின் மாவானது மிதமான சூட்டில் இருக்கும் போது சிறிய உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும். வாழை இலையில் சிறிது எண்ணெய் சேர்த்து,முழுவதுமாக பரப்பி விட வேண்டும். பின் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து வாழை இலையில் வைத்து, தட்டையாக தட்டி நடுவே ஒரு சின்ன ஹோல் போட்டு தட்டிக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து, சிறிது எண்ணெய் தடவி , தட்டி வைத்துள்ள அடையை போட்டு சிறிது எண்ணெய் விட்டு, இரண்டு பக்கமும் சிவக்கும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். இதே போன்று எல்லா உருண்டைகளையும் அடை போன்று தட்டி , தோசைக் கல்லில் போட்டு சுட்டு எடுத்தால் சுவையான தஞ்சாவூர் ஸ்பெஷல் தவலை அடை ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios