இனி சப்பாத்தி என்றாலே... சூப்பரான ''ஸ்வீட் கார்ன் சப்ஜி'' தான் செய்வீர்கள்!
பொதுவா நாம் சப்பாத்திக்கு தக்காளி குருமா, உருளை கிழங்கு குருமா , காலி பிளவர் ,பட்டாணி குருமா மற்றும் வெஜ் குருமா இப்படி தான் செய்து இருப்போம். ஸ்வீட் கார்ன் சப்ஜி செய்து இருக்கீங்களா? இல்லையா?
சாலையோரத்தில் தள்ளுவண்டியில் எரியும் நெருப்பில் சோளக்கதிரை பலரும் விரும்பி சாப்பிடுவோம். ஸ்வீட் கான் எவ்வளவு சுவையாக இருக்கிறதோ அதே அளவுக்கு நம் மனது மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை தரும்.
சுவீட் கார்னில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்றவை இருக்கின்றன. அவை நம் ஆரோக்கியத்தை நன்றாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் 2 கப்
பச்சை மிளகாய் 2
இஞ்சி சிறு துண்டு
பூண்டு 2 பல்
கடலை மாவு 1/2 கப்
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
சீரக தூள் 1/2 ஸ்பூன்
உப்பு 1/2 ஸ்பூன்
தண்ணீர் 2 கப்
கிரேவி செய்வதற்கு :
சீரகம் 1 ஸ்பூன்
பிரியாணி இலை 1
பட்டை 1
கிராம்பு 4
ஏலக்காய் 3
வெங்காயம் -1
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மல்லி தூள் 1 ஸ்பூன்
சீரக தூள் 1/2 ஸ்பூன்
தக்காளி புயூரி 2 கப்
கெட்டி தயிர் 1/2 கப்
தண்ணீர் 1 1/2 கப்
Sugar : இந்தப் பழத்தை காலை எழுந்தவுடன் சாப்பிட்டு பாருங்க: சுகரே இருக்காது!
செய்முறை:
மிக்சி ஜாரில் ஸ்வீட் கார்ன், இஞ்சி , பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ளவும்.பின் அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் கடலை மாவு, மஞ்சள் தூள் , மிளகாய் தூள், சீரக தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின் கொதிக்கும் நீரின் மேல் எண்ணெய் தடவிய ஒரு தட்டை வைத்து அந்த தட்டில் இந்த கார்ன் மற்றும் கடலை மாவு கலவையை ஊற்றி, சிறிது மிளகாய் தூளை மேற்பரப்பில் தூவ வேண்டும்.25 நிமிடங்கள் அதனை மூடி போட்டு வேக செய்ய வேண்டும். பின் அதனை முழுவதுமாக ஆற வைத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும்
அடுப்பில் ஒரு Pan வைத்து அதில் சீரகம் , பிரியாணி இலை, கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து வறுக்க வேண்டும். பின் அத்துடன் வெங்காயம்,இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை நன்கு வதக்க வேண்டும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து அனைத்தையும் நன்றாக வதக்க வேண்டும்.
பின் அதில் தக்காளி புயூரீ மற்றும் தயிர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து விட்டு பின் தண்ணீர் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இப்போது எடுத்து வைத்துள்ள கார்ன் கடலை மாவு துண்டுகளை போட்டு , சிறிது ஸ்வீட் கார்ன்னையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் சேட்டு மூடி போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கி விடவும். அவ்ளோதாங்க . ஸ்வீட்ட் கார்ன் சப்ஜி ரெடி!
சப்பாத்தி மற்றும் ப்ரோட்டாவிற்கு நல்ல காம்போவாக இருக்கும். வித்தியாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் ஸ்வீட் கார்ன் சப்ஜி! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.