Ellu Urundai : அனைவருக்குமான ஹெல்த்தி ஸ்னாக்ஸ் ''எள்ளுருண்டை''!.
எள்ளில் நமக்கு அன்றாடம் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. அந்த வகையில் எள்ளை வைத்து பாரம்பரியமான , சத்தான எள்ளு உருண்டை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இன்றைய நவீன உலகத்தில் அனைவரும் அயராது உழைத்துக் கொண்டு இருக்கும் வேளையில் நாமும் நம் குழந்தைகளும் பாரம்பரியமான, ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு வகைகளை சாப்பிடுவதே பெரும் சிரமமாக இருக்கிறது. எங்கும் மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை எடுத்துக் கொள்வதால் உடம்பிற்கு கேடு வருமே தவிர வேறு பயன் எதுவுமில்லை.
'இளைச்சவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு" என்ற பழமொழி கூட உண்டு. எள்ளானது அளவில் சிறிதாக இருந்தாலும் அது நமக்கு அளிக்கும் மருத்துவ பயன்களோ எண்ணில் அடங்காதவை. எள்ளில் நமக்கு அன்றாடம் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. அந்த வகையில் எள்ளை வைத்து பாரம்பரியமான , சத்தான எள்ளு உருண்டை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
எள்ளின் மகத்துவம்:
எலும்பு வளர்ச்சி பெறுவதற்கும் மற்றும் தேய்மானம் குறைவதற்கும் எள்ளை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
முடி வளர்ச்சிக்கும் , முடி உதிர்வதை தடுப்பதற்கும் எள் பயன்படுகிறது .
மூச்சு திணறல் குணமாகவும், உடலில் ஏற்படும் காயங்களை ஆற்றுவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் எள் வழி வகுக்கிறது இரத்த உற்பத்தியை அதிகரிப்பதற்கும் எள்பயன்படுகிறது. பயன் படுகிறது.
எல்லையில்லா பயன்களை தரும் எள்ளை வைத்து எள்ளுருண்டை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.
Brinjal Kora : ஆந்திரா ஸ்பெஷல் வங்காய கோரா!
தேவையான பொருட்கள்:
கருப்பு எள்ளு-1 கப்
வெல்லம் -3/4 கப்
நெய்- 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள்-1/4 ஸ்பூன்
செய்முறை:
எள்ளை நன்றாக அலசி வெயிலில் காய வைக்க வேண்டும். பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எள்ளு வெடித்து வாசனை வரும் வேளையில் அடுப்பை நிறுத்தி எள்ளை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மாற்றம் வெள்ளம் சேர்த்து வெல்லத்தை நீரில் கரைக்க செய்ய வேண்டும்.பின் அடுப்பில் வெள்ளம் கரைந்த பாத்திரத்தை வைத்து பாகு செய்ய வேண்டும். வெள்ளம் தண்ணீரில் கரைந்து பாகு பதத்திற்கு வந்த பின் அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஆலு மட்டர் ரெசிபி - வீட்டிலேயே செய்யலாம் வாங்க!!
இப்போது வெள்ளம் பாகினில் வறுத்து எடுத்து வைத்துள்ள எள் , நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து 2 நிமிடம் நன்றாக கிளறி விட்டு இறக்கவும். இந்த கலவை ஆறிய பின் , கையில் கொஞ்சம் நெய் தடவி சிறிது சிறிதாக உருண்டைகள் செய்யவும். அவ்ளோதாங்க.. ஆரோக்கியமான மற்றும் சத்தான எள்ளு உருண்டை ரெடி..!.