ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஆலு மட்டர் ரெசிபி - வீட்டிலேயே செய்யலாம் வாங்க!!

ஆலு மட்டரை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக செய்வார்கள்.அந்த வகையில் இன்று நாம் பஞ்சாபி ஆலு மட்டர் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.
 

How to make Aloo Mutter recipe in home

ஆலு மட்டர் என்றால் உருளைக்கிழங்கு ,பட்டாணி சேர்த்து செய்யப்படும் ஒரு வட இந்தியாவின் பரீட்சையமான ரெசிபி. பட்டாணி, கிழங்கை பயன்படுத்தி பலவகை மசாலாப் பொருட்களை சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது.

இதை சப்பாத்தி,பரோட்டா,தோசை மற்றும் சாதத்திற்கும் வைத்து சாப்பிடலாம். ஆலு மட்டரை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக செய்வார்கள்.அந்த வகையில் இன்று நாம் பஞ்சாபி ஆலு மட்டர் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள் :

Madurai Kari Dosa : மணக்கும் மதுரை கறி தோசை!

உருளைக்கிழங்கு 1 1/2 கப்(சதுரங்க வடிவில் வெட்டி வேக வைத்தது) 
பச்சை பட்டாணி 1 கப் (வேக வைத்தது) 
வெங்காயம் 3/4 கப்
தக்காளி 1 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
சீரகம் 1/2 ஸ்பூன் 
கரம் மசாலா 1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள் 1 ½ஸ்பூன் 
பச்சை மிளகாய் விழுது 1 ஸ்பூன் 
மஞ்சள்தூள் 1 சிட்டிகை 
கஸ்தூரி மேத்தி 1 ஸ்பூன் 
தண்ணீர் தேவையான அளவு 
எண்ணெய் தேவையான அளவு 
உப்பு தேவையான அளவு 

செயல்முறை:

ஒரு பானை எடுத்து அதில் எண்ணெயைச் சேர்த்து சூடு செய்ய வேண்டும்.எண்ணெய் சூடானவுடன் அதில் சீரகம் சேர்த்து, சீரகம் வெடிக்கத் தொடங்கியவுடன் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.

கசப்பில்லாமல் பாகற்காய் தொக்கு செய்வது எப்படி?

பின் இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாய் பேஸ்டை சேர்த்து நன்கு வதக்கி விட்டு அதனுடன் தக்காளி சேர்த்து , தக்காளி மசியும் வரை வதக்க வேண்டும். கலவை நன்றாக கலந்த பிறகு அதில் உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை சேர்க்க வேண்டும். 

அடுத்தாக மஞ்சள் தூள், மிளகாய் தூள்,கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து, 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இப்போது, பஞ்சாபி ஆலுமட்டர் தயார்! மேற்பரப்பில் கஸ்தூரி மேத்தியை தூவி விட வேண்டும்.

சுவையான  ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஆலு மட்டரை ஒரு முறை செய்து பாருங்கள். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios