இட்லி மாவு வைத்து மொறுமொறு ரிப்பன் பக்கோடா செய்யலாம் வாங்க!
வாருங்கள்! இட்லி மாவை வைத்து மொறுமொறு ரிப்பன் பக்கோடா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்.
தினமும் காலை, மதியம் மற்றும் இரவு போன்ற நேரங்களில் மட்டும் தான் நாம் உணவு கொள்கிறோம். பிற நேரங்களில் பசி எடுத்தால் நம்மில் பலரும் ஏதாவது ஸ்னாக்ஸ் எடுத்துக் கொள்வோம். ஒரு சிலர் பழங்களை எடுத்துக் கொள்வார்கள். குறிப்பாக மாலை நேரங்களில் அனைவரும் ஏதோ ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாகத் தான் இருக்கிறோம். ஸ்நாக்ஸ் வகைகளில் பல விதங்கள் இருந்தாலும் , புதுமையான ஐட்டங்கல் வந்தாலும் ,அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் முறுக்கு, மிக்சர், காரசேவ், பக்கோடா போன்றவைகள் உள்ளன. இதனை நம்மில் அதிகமானோர் வெளியில் பலகார கடைகளில் இருந்து வாங்கி சுவைத்து இருப்போம். இவைகள் அனைத்தும் நன்கு மொறுமொறுவெனவும் , சிறிது காரமாகவும் இருந்தாலும் மிக சுவையாக இருக்கும்.இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பிசாப்பிடுவார்கள்.
அதிலும் குறிப்பாக ரிப்பான் பக்கோடாவுக்கு என்று ஒரு தனி சுவை உள்ளது. இனி இதனை கடையில் இருந்து வாங்கி சாப்பிடாமல் வீட்டில் இருக்கும் இட்லி மாவை வைத்து சட்டென்று செய்து சாப்பிடலாம். இதனை செய்யும் நேரமும் குறைவாக உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் செய்து ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம்.
வாருங்கள்! இட்லி மாவை வைத்து மொறுமொறு நீட்டு பக்கோடா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கெட்டியான இட்லி மாவு – 1 கப்
பொட்டுக்கடலை – 1 கப்
பட்டர்-1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
குட்டிஸ்கள் விரும்பி சாப்பிடும் ராகி டார்க் சாக்லேட் கேக்! செய்யலாம் வாங்க!
செய்முறை:
முதலில் கெட்டியான இட்லி மாவினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் பொட்டுக் கடலை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பொட்டுக்கடலை மாவினை இட்லி மாவில் சேர்த்து கட்டி தட்டாமல் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.பின் பட்டர் சேர்த்து நன்கு பிசைந்து மாவினை சும்மர் 1/2 மணி நேரம் வரை அப்படியே வைத்து விட வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி,என்னைசூடான பிறகு அடுப்பின் தீயினை குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மாவினை கொஞ்சம் எடுத்து ரிப்பான் பக்கோடா அச்சில் வைத்து எண்ணெயில் பிழிந்து விட வேண்டும். அவைகள் வெந்து பொன்னிறமாக மாறிய பின் பக்குவமாக எடுத்தால் சூப்பரான மொறு மொறு ரிப்பான் பக்கோடா ரெடி! நீங்களும் இதனை ட்ரை பண்ணி பாருங்க!