குட்டிஸ்கள் விரும்பி சாப்பிடும் ராகி டார்க் சாக்லேட் கேக்! செய்யலாம் வாங்க!
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேக்கினை, சத்தான மற்றும் டேஸ்ட்டாக சாக்லேட் மற்றும் ராகி சேர்த்து செய்யலாமா! இந்த கேக் செய்ய மிகக் குறைந்த நேரமே ஆவதால் எப்போது வேண்டுமானாலும் செய்து சுவைத்திடலாம். மேலும் இதில் சிறுதானியமான ராகி சேர்த்து செய்வதால் மிகவும் ஆரோக்கியமான ஒரு ரெசிபி என்று கூறலாம். வாருங்கள்! சாஃப்டான ராகி சாக்லேட் கேக் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபி என்று சொல்லும் போது சாக்லேட் மற்றும் கேக் ரெசிபியை கூறலாம். சிறிய குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள்,வயதானவர்கள் என்று வயது வித்தியாசம் இன்றி சாக்லேட் மற்றும் கேக்கினை அனைவரும் மிகவும் பிடித்து சாப்பிடுவார்கள். சாக்லேட்டில் வைட் சாக்லேட், டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட் என்று பல விதங்கள் இருக்கின்றன. அதே போன்று கேக்கில் வெண்ணிலா கேக், ஸ்ட்ராபெர்ரி கேக், பட்டர் ஸ்காட்ச் கேக் என்று பல விதங்கள் உள்ளன.
இவைகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவர் என்று கூறினாலும் குறிப்பாக குழந்தைகள் சாக்லேட் மற்றும் கேக்கினை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் எவ்வளவு கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். மீண்டும் வேண்டும் என்று கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
இப்படி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேக்கினை, சத்தான மற்றும் டேஸ்ட்டாக சாக்லேட் மற்றும் ராகி சேர்த்து செய்யலாமா! இந்த கேக் செய்ய மிகக் குறைந்த நேரமே ஆவதால் எப்போது வேண்டுமானாலும் செய்து சுவைத்திடலாம். மேலும் இதில் சிறுதானியமான ராகி சேர்த்து செய்வதால் மிகவும் ஆரோக்கியமான ஒரு ரெசிபி என்று கூறலாம். வாருங்கள்! சாஃப்டான ராகி சாக்லேட் கேக் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
டார்க் சாக்லேட் - 100 கிராம்
ராகி மாவு -1/2 கப்
பட்டர்-1/2 கப்
முட்டை - 2
பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை
சர்க்கரை - தேவையான அளவு
கசப்பே தெரியாம பாகற்காய் ரசம் செய்யலாமா?
செய்முறை:
முதலில் டார்க் சாக்லேட்டை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை மைக்ரோ ஓவனை 100 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து ஒரு பௌலில் பொடித்த டார்க் சாக்லேட்டை வைத்து உருக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக பீட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின் அதில் உருக்கி வைத்துள்ள டார்க் சாக்லேட் மற்றும் பட்டர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது இந்த கலவையில் ராகி மாவினை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கிளறி விட வேண்டும். ஒரு ட்ரேயை எடுத்து அதில் சிறிது பட்டர் ஸ்ப்ரெட் செய்த பின்னர் கேக் கலவையை டிரேயில் ஊற்றிக் கொண்டு அதனை மைக்ரோ ஓவனில் 150 டிகிரி சூட்டில் சுமார் 15 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால் ராகி டார்க் சாக்லேட் கேக் ரெடி!