Asianet News TamilAsianet News Tamil

ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் மலாய் பன்னீர் ரெசிபி!

வாருங்கள்! டேஸ்ட்டான மலாய் பன்னீர் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

How to make Restaurant Style Malai Paneer in Tamil
Author
First Published Feb 2, 2023, 10:54 AM IST

வழக்கமாக சப்பாத்தி,நாண்,புல்கா போன்றவற்றிக்கு வெஜ் குருமா,சிக்கன் குருமா,பட்டாணி குருமா போன்றவை தான் மிக அதிகமான அளவில் செய்து சாப்பிட்டு இருப்போம். அதை தவிர வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு உதவி புரியும். இன்று நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுகின்ற பன்னீர் வைத்து அட்டகாசமான மலாய் பன்னீர் ரெசிபியை காண உள்ளோம்.ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செய்யப்படும் இந்த ரெசிபியை பிடிக்காதவர்கள் என்று எவரும் கூற மாட்டார்கள். இதனை சப்பாத்தி,புல்கா, நாண் போன்றவற்றிற்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

வாருங்கள்! டேஸ்ட்டான மலாய் பன்னீர் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • பன்னீர்- 200 கிராம்
  • வெங்காயம்-1
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
  • முந்திரி - 3 ஸ்பூன்
  • பாதாம் - 3 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • கரம் மசாலா - 1 ஸ்பூன்
  • மல்லித் தூள் -1 ஸ்பூன்
  • சீரகத் தூள் - 2 ஸ்பூன்
  • கஸ்தூரி மேத்தி-1 ஸ்பூன்
  • சர்க்கரை - 1 ஸ்பூன்
  • ஃப்ரெஷ் க்ரீம் - 3 ஸ்பூன்
  • நெய்-3 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு 

ஆல்  இன் ஒன் “சிக்கன் முந்திரி கிரேவி” ஈஸியா செய்யலாம் வாங்க!


செய்முறை:

அடுப்பில் 1 கடாயை வைத்து, அதில் சிறிது பட்டர் சேர்த்து பட்டர் உருகிய பின்னர் வெட்டி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை பொன்னிறமாக ஃப்ரை செய்து எடுத்துக் கொண்டு அதனை , வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின் தனியாக எடுத்துக் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சின்ன பௌலில் பாதாம் மற்றும் முந்திரி ஆகியவற்றை தண்ணீரில் போட்டு சுமார் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து அதனை மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின், சீரகம் சேர்த்து தாளித்துக் கொண்டு பின் அதில் பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும். அடுத்தாக அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை சென்ற பிறகு, அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள முந்திரி பாதாம் பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறி விட்டு, சிறிது தண்ணீர் தெளித்து வதக்கி விட வேண்டும். அடுத்தாக அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து வதக்கி விட்டு பின் சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி விட்டு சுமார் 20 நிமிடங்கள் வரை அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டும். இறுதியாக அதில் கரம் மசாலா சேர்த்து கிளறி விட்டு இறக்கி விட வேண்டும். பின் கஸ்தூரி மேத்தி மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து பரிமாறினால் டேஸ்ட்டான க்ரீமி மலாய் பன்னீர் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios