குழந்தைகள் விரும்பும் "க்ரிஸ்பி ப்ரான் பால்ஸ்" செய்து மகிழ்ச்சியாக வாங்க!
வாருங்கள்! ருசியான இறால் பால்ஸை எளிமையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கடல் வகையை சேர்ந்த இறால் உணவை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இறால் வைத்து பல ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் இறால் வைத்து ருசியான ‘இறால் பால்ஸ்’ செய்வதை பற்றி காண உள்ளோம்.
இதனை பண்டிகை தினமான கிறிஸ்துமஸ் அன்று செய்து குடும்பத்துடன் மகிழ்ந்து சாப்பிடுங்கள். இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள். வாருங்கள்! ருசியான இறால் பால்ஸை எளிமையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
இறால் -1/2 கிலோ
முட்டை - 1
வெங்காயம் -1
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
கார்ன் பிளார் - 2 ஸ்பூன்
பிரெட் க்ரம்ஸ் -1 கப்
பச்சை மிளகாய் - 2
மல்லித் தழை - கையளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இனிமே இட்லி,தோசைக்கு மாங்காய் சட்னி செய்து அசத்துங்க!
செய்முறை:
முதலில் இறாலை சுத்தம் செய்து கொண்டு அதனை அலசி விட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொண்டு, சுமார் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.
ஒரு மிக்சி ஜாரில், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து மை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
15 நிமிடங்கள் கழித்து ஊற வைத்துள்ள இறாலை ஒரே மாதிரியான அளவில் அரிந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரிந்த இறாலை சேர்த்து அதில் சோயா சாஸ், உப்பு,மிளகுத்தூள்,அரைத்து வெங்காய பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி , நன்றாக பீட் செய்து கொண்டு அதனை இறால் கலவையில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
பின் இறால் கலவையில் கார்ன் பிளார் மற்றும் 1/2 கப் ப்ரெட் க்ரம்ஸ் சேர்த்து மீண்டும் நன்றாக பிரட்டிக் கொண்டு , சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
தயார் செய்து வைத்துள்ள இந்த இறால் உருண்டைகளை மீதமுள்ள 1/2 கப் பிரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்து அதனை கிட்டதட்ட 1/2 மணி நேரம் வரை பிரிட்ஜில் வைத்து விட வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் பிரிட்ஜில் உள்ள இறாலை எடுத்து ஒவ்வொரு உருண்டைகளாக போட்டு அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து உருண்டைகளை பொரித்து,எண்ணெய் இல்லாமல் வடிகட்டி தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
இறுதியாக பொரித்த இறால் உருண்டைகள் மீது அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவினால் க்ரிஸ்பியான இறால் பால்ஸ் ரெடி!!! இதற்கு சாஸ் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.