Asianet News TamilAsianet News Tamil

இனிமே இட்லி,தோசைக்கு மாங்காய் சட்னி செய்து அசத்துங்க!

வாருங்கள்! சுவையான மாங்காய் சட்னியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Raw Mango Chutney in Tamil
Author
First Published Dec 19, 2022, 12:08 PM IST

வழக்கமாக இட்லி, தோசை போன்றவற்றிக்கு நாம் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, கார சட்னி,புதினா சட்னி,பூண்டு சட்னி போன்றவற்றை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இதனையே செய்து அலுத்து விட்டதா? 

கொஞ்சம் வித்தியாசமான சுவையில் ஏதேனும் புதுமையாக சட்னி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். 

பொதுவாக மாங்காய் வைத்து சாம்பார், பச்சடி, ஊறுகாய், மாங்காய் சாதம் போன்றவற்றை அதிக அளவில் செய்து இருப்போம். மாங்காய் வைத்து சுவையான சட்னியை செய்யலாமா ! இது நாம் வழக்கமாக செய்யும் சட்னிகளுக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும். 

வாருங்கள்! சுவையான மாங்காய் சட்னியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

மாங்காய் பெரியது 1
தேங்காய் துருவல் -1/2 கப் 
வர மிளகாய்-7 அல்லது பச்சை மிளகாய் -7
இஞ்சி - 1 இன்ச் 
வெல்லம் -சிறிது 
பெருங்காய தூள்-1/4ஸ்பூன் 
உப்பு-தேவையான அளவு 

குழந்தைகள் விரும்பும் "வெண்ணிலா கப் கேக்" வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள் :

கடுகு- 1/2 ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு-1 ஸ்பூன் 
எண்ணெய்-தேவையான அளவு 
கருவேப்பிலை - 1 கொத்து 

செய்முறை:

முதலில் தேங்காயை துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மாங்காயை ஒரு முறை அலசி விட்டு ,தோல் நீக்கி கொள்ள வேண்டும். பின் தோல் நீக்கிய மாங்காயினை சிறிய துண்டுகளாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் இஞ்சியை அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு மிக்சி ஜாரில் அரிந்த மாங்காய், துருவி வைத்துள்ள தேங்காய், வர மிளகாய் அல்லது பச்சை மிளகாய் , அரிந்து வைத்துள்ள இஞ்சி,வெல்லம் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போது மிக்சி ஜாரில் சிறிது தண்ணீர் தெளித்து மை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடு செய்ய வேண்டும். எண்ணெய் சூடான பின்பு, கடுகு, உளுத்தம் பருப்பு , கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். 

தாளித்ததை சட்னியில் சேர்த்து விட வேண்டும். அவ்ளோதான்! ருசியான மாங்காய் சட்னி ரெடி!!!

இதனை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள். நிச்சயமாக வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இதன் சுவை இருக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios