உடலை குளிர்ச்சியாக வைக்க அன்னாசிப்பழ மோர்க்குழம்பு.வேற லெவல் டேஸ்ட்டில் இருக்கும்.1 பருக்கை சாதம் கூட மிஞ்சாது
வாருங்கள்! ஊட்டச்சத்தும் சுவையும் நிறைந்த அன்னாசி பழ மோர்க் குழம்பை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் மதியத்திற்கு என்ன குழம்பு செய்வது என்று யோசித்து செய்வதே மிகவும் சிரமமான வேலை. அப்படி இன்று எதுவும் யோசிக்காதீங்க. இன்னைக்கு டக்குனு எதுவும் யோசிக்காம இந்த அன்னாசி மோர் குழம்பு செய்து சாப்பிடுங்க. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கு உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டிய உணவகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது.
அந்த வகையில் இந்த அன்னாசி பழ மோர்க் குழம்பை செய்து பாருங்க. வேற லெவல் டேஸ்ட்டை தரும் இதனை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். வழக்கமாக நாம் மோர்குழம்பில் காய்கறிகளை சேர்த்து தான் செய்வோம். ஆனால் இன்று நாம் சற்று வித்தியாசமாக அன்னாசி பழம் சேர்த்து மோர்க் குழம்பு செய்வதை காண உள்ளோம்.
வாருங்கள்! ஊட்டச்சத்தும் சுவையும் நிறைந்த அன்னாசி பழ மோர்க் குழம்பை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
அன்னாசிப்பழம்- 1/2 பழம்
துருவிய தேங்காய் - 1/4 கப்
தயிர்– 1/2 கப்
பச்சைமிளகாய்- 4
ஊற வைப்பதற்கு:
மிளகு- 1/2 ஸ்பூன்
சீரகம்- 1/2 ஸ்பூன்
அரிசி- 1 ஸ்பூன்
துவரம்பருப்பு- 4 ஸ்பூன்
தாளிப்பதற்கு:
கடுகு- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
பெருங்காயத்தூள் -1/4ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- தேவையான அளவு
ஒரு முறை இட்லி,தோசைக்கு செட்டிநாடு ஸ்டைலில் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி செய்து அசத்துங்க!
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் கடுகு, கறிவேற்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து பின் அன்னாசி பழத்துண்டுகளை சேர்த்து வதக்கி விட்டு சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும்.
ஒரு மிக்சி ஜாரில் அரிசி, துவரம் பருப்பு, மிளகு, சீரகம் மற்றும் தேங்காய் சேர்த்து அரைத்து பின் அதில் தயிர் சேர்த்து மீண்டும் அரைத்து அதனை கடாயில் சேர்த்து அடுப்பின் தீயனை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். துவரம் பருப்பும் வாசனை செல்லும் வரை சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அவ்வப்போது கிளறி விட வேண்டும்.
மோர்க்குழம்பு நுரைத்து வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி விட்டு இரண்டு வரமிளகாய் சேர்த்து தாளித்து இதில் சேர்த்து பரிமாறினால் அருமையான பைனாப்பிள் மோர்க்குழம்பு ரெடி! நீங்களும் ஒரு முறை ட்ரை செய்து அசத்துங்க!