Asianet News TamilAsianet News Tamil

பன்னீர் பக்கோடாவை இப்படி செய்து தாங்க! அடுத்த நிமிடமே அனைத்தும் காலி ஆகி விடும்.


வாருங்கள்! பன்னீர் பக்கோடாவை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


 

How to make Paneer Pakoda in Tamil
Author
First Published Jan 15, 2023, 5:10 PM IST

என்ன தான் வயிறு நிரம்ப மதியம் சாப்பிட்டு இருந்தாலும் மாலை நேரங்களில் ஏதேனும் ஒரு ஸ்னாக்ஸினை சாப்பிடும் பழக்கம் நம்மில் அதிகமானோருக்கு இருக்கிறது. வழக்கமாக நாம் புட்டு, கொழுக்கட்டை, வடை, போண்டா போன்றவற்றை  தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம்,

இன்று நாம் ஒரு சேஞ்சுக்காக பன்னீர் வைத்து ஒரு க்ரிஸ்பியனா ரெசிபியை காண உள்ளோம். பன்னீர் சேர்த்து எதை செய்தாலும் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். அந்த வகையில் இன்று நாம் பன்னீர் வைத்து ஒரு பன்னீர் பக்கோடாவை செய்யலாம் இதனை குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அலாதியாக இருக்கும்.

வாருங்கள்! பன்னீர் பக்கோடாவை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்:
 

  • பன்னீர் - 200 கிராம்
  • கடலை மாவு –1 கப்
  • கார்ன் பிளார் - 1/4 கப்
  • ஓமம் - 1/4 ஸ்பூன்
  • சாட் மசாலா பவுடர் - 2 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • டொமேட்டோ கெட்சப் - தேவையான அளவு

         விடுமுறை ஸ்பெஷல்- சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் செய்து அனைவரும் சாப்பிடலாம்!

செய்முறை:

முதலில் பன்னீரை ஒரே மாதிரியான அளவில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் கடலை மாவு,கார்ன் பிளார் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் மிளகாய் தூள், சாட் மசாலா, உப்பு மற்றும் ஓமம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

இப்போது மாவினில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். ( பக்கோடா பதத்திற்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.) அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடான பின்பு, அடுப்பின் தீயினை சிம்மில் வைத்துக் கொண்டு , பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து அதன் மேல் மேல் கெட்சப் ஸ்ப்ரெட் செய்து மற்றொரு பன்னீரை வைத்து , அதனை கடலை மாவு கலவையில் டிப் செய்து எண்ணெயில் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம் சிவந்து பொன்னிறமாக மாறிய பிறகு, மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எண்ணெய் இல்லாமல் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதான்! க்ரன்ச்சியான பன்னீர் பக்கோடா ரெடி! இதே மாதிரி அனைத்து பன்னீர் துண்டுகளையும் செய்து பொரித்து எடுத்தால் செய்த அடுத்த நிமிடமே அனைத்தும் காலி ஆகி விடும். 

Follow Us:
Download App:
  • android
  • ios