Pallipalayam Chicken Recipe : இந்த பதிவில் கொங்குநாடு பள்ளிபாளையம் சிக்கன் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தென்னிந்தியாவில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு ஸ்பெஷலாக இருக்கும். அந்த வரிசையில் கொங்குநாடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். தனித்துவமான ருசியை கொண்டுள்ள இந்த சிக்கன் செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படாது. மிகவும் சுலபமாக செய்துவிடலாம். அது எப்படி என்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: திருநெல்வேலி ஸ்டைலில் கோழிக்குழம்பு... ஒருமுறை செய்ங்க.. திரும்பத் திரும்ப செய்வீங்க...!

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 500 கிராம்
தேங்காய் - 2 துண்டு
காய்ந்த மிளகாய் - 10 கிராம் ( விதை நீக்கியது)
பூண்டு - 8
இஞ்சி - சின்ன துண்டு
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூ 
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 200 கிராம்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு

இதையும் படிங்க: அசத்தலான சுவையில் கிரீன் சில்லி சிக்கன்.. இப்படி செஞ்சு அசத்துங்க..!

செய்முறை:

முதலில் வாங்கி வைத்த கோழிக்கறியை நன்றாக தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளுங்கள். இப்போது அதில் சிறிதளவு மஞ்சள் தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலக்கி தனியாக ஊறவைத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து இடித்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின் அதில் கடுகு, சோம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அடுத்ததாக நறுக்கி தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இடித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுதையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு ஊறவைத்துள்ள சிக்கனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சிக்கனில் மசாலா நன்றாக இறங்கியதும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி இதனுடன் சிறிதளவு தண்ணீரையும் ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் அதிகமாக சேர்க்க வேண்டாம். இப்போது ஒரு தட்டால் கடாயை சுமார் பத்து நிமிடம் மூடி வைத்து இறக்கவும். அவ்வளவுதான் கொங்குநாடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் ரெடி. இந்த சிக்கனை நீங்கள் சாதம் அல்லது சப்பாத்திக்கு வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.