Asianet News TamilAsianet News Tamil

ஒரு வாரம் வெச்சு சாப்பிடலாம்...! கெட்டு போகாத சின்ன வெங்காய தொக்கு!

இட்லி, தோசைக்கு டிபிரெண்ட்டான , அதே நேரம் குவிக்கா ஒரு சைடு டிஷ் செய்யணுமா? வீட்டில் சின்ன வெங்காயம் இருக்கா? அப்படினா நீங்களும் இந்த சுவையான,எளிமையான சைடு டிஷ் செய்யலாம்ங்க . இந்த தொக்கு இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் சிறந்த காம்பினேஷனாக இருக்கும்.இந்த ரெசிபியின் சுவைக்கு முக்கிய காரணம் இதில் சேர்க்கப்படும் நல்லெண்ணெய் தான். சின்ன வெங்காய தொக்கு எப்படி செய்யலாம் என்று இன்றைய பதிவில் காணலாம்.

How to make onion Tokku in Tamil
Author
First Published Sep 30, 2022, 3:30 PM IST

வெங்காயத்தை உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். தினமும் சின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும். இரத்த சோகை உள்ளவர்கள் வெங்காயத்தை சாப்பிட்டால் இரத்த சோகை பிரச்சனையிலிருந்து குணமாகலாம் .மேலும் சின்ன வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் முழங்கால் வலி, தலைவலி, பார்வை மங்குதல் போன்றவை குணமாகும். 

இவ்வளவு மருத்துவ பயன்களை தருகின்ற வெங்காயத்தை வைத்து தொக்கு எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்காலம் . 

டீ, காஃபி பிரியர்களே: ஒருநாளைக்கு எத்தனை டீ, காஃபி குடிக்கலாம்? தெரிந்து கொள்ளுங்கள்!


தொக்கிற்கு தேவையான பொருட்கள்:

1 கப் - சின்ன வெங்காயம்,
2 பல் – பூண்டு,
6 - வர மிளகாய், 
3 டேபிள் ஸ்பூன்- நல்லெண்ணெய்,
சிறியளவு - புளி ,
உப்பு தேவையான அளவு .

தாளிப்பதற்கு:

1 ஸ்பூன் நல்லெண்ணெய்,
1/4 ஸ்பூன் கடுகு,
சிறிது கறிவேப்பிலை,
1 சிட்டிகை பெருங்காயத் தூள்.

செய்முறை :

ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, புளி, சின்ன வெங்காயம், வர மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மை போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

சாதம் மீதமாயிடுச்சா? அப்போ இப்படி செய்ங்க.)

பின் அடுப்பில் கடாயை வைத்து, அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி , எண்ணெய் சூடானதும், அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரையில் வதக்கி விட வேண்டும்.தொக்கு கெட்டியாகி நிறம் மாறும் வரை நன்கு கிளறி விட்டு , நிறம் மாறிய பின் அடுப்பை ஆப் செய்து விட வேண்டும். 

பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, வெங்காயத் தொக்கில் சேர்த்து கிளறினால், காரசாரமான சுவையான சின்ன வெங்காயத் தொக்கு தயார். இந்த ஈசியான ரெசிபியை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. 

அறைவெப்பநிலையில் 3 நாட்கள் வரையிலும், மேலும் பிரிட்ஜில் வைத்தால் 10 நாட்கள் வரை கூட கெடாமல் இருக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios