Asianet News TamilAsianet News Tamil

ஹெல்த்தி ஓட்ஸ் கட்லெட் செய்யலாம் வாங்க!

எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை அள்ளித்தரும் ஓட்ஸ் வைத்து சூப்பரான, ஹெல்த்தியான ஓட்ஸ் கட்லெட் ரெசிபியை வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How To Make Oats Cutlet Recipe In Tamil
Author
First Published Feb 23, 2023, 12:48 PM IST

ஓட்ஸில் அதிக அளவு புரதம், இரும்பு, மக்னிசீயம், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி1, பி 2, பி6, போன்ற சத்துக்கள் உள்ளன. ஓட்ஸானது இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுத்து மாரடைப்பு வருவதை குறைக்கிறது. காய்கறிகள்,பழங்களில் இருக்கின்ற 'பைட்டோ கெமிக்கல்’ ஓட்ஸிலும் உள்ளதால் ஹார்மோன் சம்பந்தமான நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதனை தவிர பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோய், கர்பப்பை புற்று நோய் போன்றவையம் வராமல் தடுக்கிறது. மேலும் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை அள்ளித்தரும் ஓட்ஸ் வைத்து சூப்பரான கட்லெட் ரெசிபியை காணலாம்.


 வழக்கமாக ஆலூ கட்லெட்,பன்னீர் கட்லெட்,சோயா கட்லெட் போன்றவை நாம அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் ஓட்ஸ் வைத்து சூப்பரான கட்லெட் ரெசிபியை செய்ய உள்ளோம். இதன் சுவை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு ரெசிபி என்று கூறலாம். வாருங்கள்! ஹெல்த்தியான ஓட்ஸ் கட்லெட் ரெசிபியை வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 1 கப்
கேரட்-1
உருளைக்கிழங்கு-1
பச்சைப் பட்டாணி - 50 கிராம்
கேப்ஸிகம்-1
வெங்காயம்-1
பிரவுன் பிரெட் ஸ்லைஸ் - 2
தனியாத்துள்-1/2 ஸ்பூன்
சீரகத்தூள்-1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் -1/2 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் -தேவையான அளவு

Pumpkin Seeds: தினந்தோறும் பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
செய்முறை:

முதலில் வெங்காயம், உருளைக்கிழங்கு, கேப்ஸிகம்,கேரட், மல்லித்தழை ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் ஓட்ஸ் சேர்த்து அதனை பொடியாக அரைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பிரெட்டை மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொண்டு மற்றொரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடான பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட வேண்டும்.

பின் பொடியாக அரிந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேப்ஸிகம்,கேரட் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும் பின் அதில் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி விட்டு 1/2 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி மூடி விட்டு வேக விட வேண்டும். காய்கறிகள் வெந்த பிறகு அதனை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். இப்போது அந்த கலவையில் ஓட்ஸ் தூள் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பின் இதில் மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள்,மல்லித்தழை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

பிசைந்த கலவையை ஒரே மாதிரியான அளவில் உருட்டி அதனை தட்டையாக தட்டி பின் பிரெட் பொடியில் இரண்டு பக்கமும் பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து இந்த கட்லெட்களை வைத்து சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் சிவந்து வெந்த பின் அதனை எடுத்து டொமேட்டோ சாஸ் வைத்து பரிமாறினால் ஹெல்த்தி ஓட்ஸ் கட்லெட் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios