Spinach Biryani: குழந்தைகள் சாப்பிட சத்தான கீரை பிரியாணி செய்வது எப்படி?
அனைத்து குழந்தைகளுக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். ஆகவே, குழந்தைகள் கீரையை வெறுப்பில்லாமல் சாப்பிட, கீரை பிரியாணி செய்து கொடுக்கலாம். இப்போது கீரை பிரியாணியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதே அம்மாவின் நோக்கமாகும். அதில் முதலிடத்தில் இருக்கும் சத்தான உணவு கீரை. ஆனால் பல குழந்தைகளுக்கு கீரை பிடிக்காததால், உணவில் கீரையை சேர்த்துக் கொள்வதே இல்லை. கீரைகளில் அதிகளவில் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகையால் கீரை உணவுகளை எடுத்துக் கொண்டால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.
கீரை பிரியானி
அனைத்து குழந்தைகளுக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். ஆகவே, குழந்தைகள் கீரையை வெறுப்பில்லாமல் சாப்பிட, கீரை பிரியாணி செய்து கொடுக்கலாம். இப்போது கீரை பிரியாணியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1 கப்
வெந்தயக் கீரை- 1 கப்
தக்காளி - 1
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
பிரிஞ்சி இலை - 1
உருளைக்கிழங்கு - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
நெய், எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயத்தை எடுத்து நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும். பின், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
வெந்தயக் கீரையை தண்ணீரில் நன்றாக அலசி, சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடங்கள் ஊற வைத்து, இப்போது நெய்யில் ஈரம் போகும் அளவுக்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடான பிறகு, பிரிஞ்சி இலை தாளித்ததும் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போனதும், தக்காளியை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
அடுத்ததாக வெந்தயக் கீரையை போட்டு, வதக்கிய பிறகு, உருளைக் கிழங்கைச் சேர்த்து, இன்னும் சிறிது நேரம் வதக்கி, உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து, இதில் அரிசியை சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரில் ஒரு விசில் வந்ததும் இறக்கி கொள்ளவும்.
இப்போது சூப்பரான, சவையான கீரை பிரியாணி ரெடியாகி விடும். இந்த கீரை பிரியானியை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால், விரும்பி உண்பார்கள். அதோடு, குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்களும் கிடைக்கும்.