Asianet News TamilAsianet News Tamil

இந்த வார விடுமுறைக்கு சூப்பரான ஸ்ரீலங்கன் ஸ்பெஷல் தக்கடி செய்து பாருங்க!

வாருங்கள்! ஸ்ரீலங்கன் தக்கடி ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 
 

How to make Mutton Thakkadi Recipe in Tamil
Author
First Published Feb 21, 2023, 1:24 PM IST

இலங்கையின் பிரபலமான உணவு வகைகளில் தக்கடியும் ஒன்று. இந்த உணவானது பெரும்பாலும் காலை உணவாக செய்யப்படுவதாகும். இதனை அரிசி மாவு மற்றும் மட்டன் எலும்புகளுடன் செய்யப்படும் உணவு வகை என்பதால் இதன் சுவை மிகவும் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் மிகவும் சுவையாகவும் இருக்கும். நாம் வழக்கமாக எலும்பு வைத்து குழம்பு அல்லது சூப் தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இந்த தக்கடியை ஒரு முறை ட்ரை செய்து சாப்பிட்டால் பின் இதனை அடிக்கடி செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். மேலும் இதனை ஸிஉ குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை செய்யும் நேரமும் மிக குறைவாகும். இந்த தக்கடியை எப்போது செய்து கொடுத்தாலும் அலுத்து போகாமல் அனைவரும் சாப்பிடுவார்கள்.

வாருங்கள்! ஸ்ரீலங்கன் தக்கடி ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகாய் - 5
துருவிய தேங்காய்- 2 கப்
கறிவேப்பிலை- 1 கொத்து

மசாலாவிற்கு:

எலும்புடன் கூடிய மட்டன் -1/2 கிலோ
வெங்காயம் -1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
தேங்காய் - 3 ஸ்பூன்
மசாலா பொடி- 4 ஸ்பூன்
மிளகாய் தூள்-3 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடிய “தினை அல்வா”

செய்முறை :

முதலில் மட்டனை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய்,வெங்காயம் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின் அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.

அடுத்தாக அதில் மட்டனை சேர்த்துக் கொண்டு அதில் கறிவேப்பிலை, மிளகாய் தூள், மசாலா பொடி மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து வேக விட வேண்டும் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு சேர்த்து அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ,துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாவில் சூடான மட்டன் குழம்பு சிறிது ஊற்றி மற்றும் தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொள்ள வேண்டும்.

பின் பிசைந்த மாவினை ஒரே மாதிரியான அளவில் உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த உருண்டைகளை கொதிக்கும் குழம்பில் ஒவ்வொரு உருண்டைகளாக கவனமாக போட வேண்டும். இப்போது குழம்பினை சுமார் 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து வேக விட வேண்டும். அவ்ளோ தான் சூடான சுவையான பாரம்பரிய ஸ்ரீலங்கன் தக்கடி ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios