சப்பாத்திக்கு சூப்பரான சைட் டிஷ் "மஷ்ரூம் மக்கானி"! செய்யலாம் வாங்க!
வாருங்கள்!சுவையான மஷ்ரூம் மக்கானியை வீட்டில் எளிமையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக மஷ்ரூம் வைத்து மஷ்ரூம் மசாலா, மஷ்ரூம் கிரேவி, மஷ்ரூம் சூப் என்று நாம் பல விதமான ரெசிபிக்கள் செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று சப்பாத்தி,நாண் ,குல்ச்சா, புல்கா போன்றவற்றிக்கு அட்டகாசமாக இருக்கும் ஒரு ரெசிபியை மஷ்ரூம் வைத்து செய்ய உள்ளோம். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். மேலும் இதனை அடிக்கடி செய்யுமாறு வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள்.
வாருங்கள்!சுவையான மஷ்ரூம் மக்கானியை வீட்டில் எளிமையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மஷ்ரும்-200 கிராம்
பட்டர்-2 ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி பேஸ்ட் - 4
பிரெஷ் க்ரீம் - 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
சர்க்கரை - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 2 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி 1 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
மல்லித்தழை-1 கையளவு
வீட்ல பிரெட் இருந்தா போதும் .டேஸ்டான வடையை சட்டென்று செய்து விடலாம்
செய்முறை:
முதலில் மஷ்ரூமை அலசிக் கொண்டு ஒரே மாதிரியான அளவில் அரிந்து வைத்துக் கொண்டு, பின் வெங்காயத்தை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் தக்காளியை சேர்த்து பேஸ்ட் போன்று செய்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் சிறிது பட்டர் சேர்த்து சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடான பின் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, உப்பு தூவி வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறிய பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு அடுத்தாக தக்காளி பேஸ்ட் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அதன் காரத் தன்மை போகும் வரை வதக்க வேண்டும். பின் அரிந்த மஷ்ரூமை சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறிது சர்க்கரை சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் தீயினை சிம்மில் வைத்து வரை வேக வைக்க வேண்டும்.
மஷ்ரூம் நன்கு வெந்த பிறகு, கொஞ்சம் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து கிரேவியானது கெட்டியாக மாறிய பிறகு கஸ்தூரி மேத்தி மற்றும் சிறிது பட்டர் சேர்த்து பின் இறுதியாக பிரெஷ் க்ரீம் சேர்த்தால், சுவையான மஷ்ரும் மக்கானி ரெடி!