Asianet News TamilAsianet News Tamil

வீட்ல பிரெட் இருந்தா போதும் .டேஸ்டான வடையை சட்டென்று செய்து விடலாம்

இன்று நாம் வீட்டில் இருக்கும் பிரெட் வைத்து ருசியான பிரெட் வடையை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How to make Bread vada in Tamil
Author
First Published Dec 25, 2022, 12:45 PM IST

தினமும் நாம் மதியம் என்ன தான் வயிறு நிறைய சாப்பிட்டாலும், மாலை நேரத்தில் சுட சுட ஏதோ ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டு பழகி விட்டோம். 

வழக்கமாக நாம் மாலை நேரங்களில் கட்லெட், சமோசா, வடை போன்றவற்றை அதிகாமாக சாப்பிடுவோம். அதிலும் குறிப்பாக பருப்பு வடை, மசால் வடை, மெது வடை,கீரை வடை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் சற்று வித்தியாசமாக மாவு அரைக்காமல் , மிக சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய வடை ரெசிபியை தான் காண உள்ளோம். 

அந்த வகையில் இன்று நாம் வீட்டில் இருக்கும் பிரெட் வைத்து ருசியான பிரெட் வடையை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்: 

பிரட் - 3 துண்டுகள்
கேரட் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1 
புதினா - 2 ஸ்பூன்
மல்லித்தழை - 2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
இஞ்சி - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/4 ஸ்பூன் 
கார்ன் பிளார் - 2 ஸ்பூன்
தண்ணீர் - 2 ஸ்பூன் 
உப்பு-தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

இனி ரெஸ்டாரண்டில் சாப்பிட வேண்டாம். வீட்டிலேயே ரொம்ப ஈஸியாக செய்யலாம் “பட்டர் குல்ச்சா”

செய்முறை: 

முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் ,மல்லித்தழை ,புதினா ,இஞ்சி ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். பிரட்களை பிய்த்து போட்டுக் கொள்ள வேண்டும். கேரட்டினை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு பெரிய பௌலில் பிய்த்து வைத்துள்ள பிரட் பீஸ்கள் இஞ்சி, , துருவிய கேரட், பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

பின் அதில் கரம் மசாலா தூள், உப்பு, சோம்பு முதலியவற்றை தூவி மீண்டும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் கலவையில் கார்ன் பிளார் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு, வடை பதத்திற்கு மாவினை பிசைந்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெண்யை காய வைக்க வேண்டும். எண்ணெய் காய்ந்த பின் அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து விட வேண்டும். பிசைந்த மாவினை கையில் கொஞ்சம் எடுத்து வடை போன்று தட்டி, கொதிக்கும் எண்ணெயில் போட வேண்டும். 

வடையானது ஒரு பக்கம் சிவந்த பின் மறு பக்கம் திருப்பி போட்டு, மறு பக்கமும் சிவந்த பின் கடாயில் இருந்து எண்ணெய்யை வடிகட்டி ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போன்று அனைத்து மாவினையும் வடை போன்று தட்டி பொரித்து எடுத்தால் ருசியான பிரெட் வடை ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios