கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற ஊட்ட சத்து கொண்ட “பாசிப்பருப்பு இட்லி”
வாருங்கள்! ஆரோக்கிய நலனை அள்ளி தரும் பாசி பருப்பு சேர்த்து சத்தான பாசிப்பருப்பு இட்லியை வீட்டில் எளிதாக செய்வது எப்படி என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக நாம் செய்கின்ற உணவுகளையே சிறிது வித்தியாசமாக செய்தாலே போதும். வீட்டில் உள்ளவர்களின் பாராட்டினை பெற்று விடலாம். அந்த வகையில் இன்று நாம் வழக்கமாக செய்கின்ற இட்லியை கொஞ்சம் டிஃபட்ரெண்ட்டாக செய்ய உள்ளோம்.
இட்லி என்றவுடன் அரிசி,பருப்பை ஊற வைத்து, மாவு ஆட்டி,புளிக்க வைத்து அப்பாபா! பெரிய ப்ராசஸ் தான் அது. ஆனால் இன்று நாம் மாவு ஆட்டாமலே எளிதில் செய்யக்கூடிய இட்லியை பார்க்க உள்ளோம்.
மூங் தால் எனப்படும் பாசிப்பயிறு அல்லது சிறுபயறு வைத்து தான் இன்று நாம் இட்லி செய்ய உள்ளோம். வளரும் குழந்தைகளுக்கு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற ஊட்ட சத்து கொண்ட உணவு ஆகும்.
பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் பொட்டாசியம் ,கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றை இருப்பதால் உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.
இது தவிர புரோட்டின் ,நார்ச்சத்து அதிகமாக காணப்படுவதால், நமது உடலில் இருக்கும் கொழுப்பினை கரைத்து உடல் எடையை குறைக்க துணை புரிகிறது.
வாருங்கள்! ஆரோக்கிய நலனை அள்ளி தரும் பாசி பருப்பு சேர்த்து சத்தான பாசிப்பருப்பு இட்லியை வீட்டில் எளிதாக செய்வது எப்படி என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - 1 கப்
கேரட் - 1/4 கப்
கடுகு - 1/2ஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச்
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 3
மல்லித்தழை-கையளவு
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
பேக்கிங் சோடா -1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
குட்டிஸ்களுக்கு பிடித்த சாக்லேட் பாஸ்தா ! இப்படி செய்த்து பாருங்க.கொஞ்சம் கூட மீதம் இருக்காது
செய்முறை :
இஞ்சி , பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் பாசிப்பருப்பு எடுத்துக் கொண்டு அலசி விட்டு சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்த பின்,அதில் கடுகு, பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும். இதனை அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பு மாவினில் கலந்து விட வேண்டும்.
பின் மாவினில் பொடியாக அரிந்த இஞ்சி,துருவிய கேரட், பொடியாக அரிந்த மல்லித்தழை,பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்தில் மாவினை கரைத்துக் கொள்ள வேண்டும்
அடுப்பில் ஒரு இட்லி பாத்திரம் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் இட்லி தட்டுகள் மீது சிறிது எண்ணெய் தடவி பாசிப்பருப்பு மாவினை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
பின் இட்லி பாத்திரத்தை மூடி விட்டு சுமார் 15 நிமிடங்கள் வரை வேக வைத்து இறக்க வேண்டும். அவ்ளோதான்!சத்தான பாசிப்பருப்பு இட்லி ரெடி!