நாவில் வைத்தவுடன் கரையும் பாசிப்பருப்பு அல்வா ! செய்யலாம் வாங்க!
வாருங்கள்! கமகமக்கும் நெய் வாசனையில் தித்திப்பான பாசிப்பருப்பு அல்வா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக வீட்டின் விஷேஷ தினங்களான பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றிக்கு நாம் ஸ்வீட் வகைகளை வெளியில் இருந்து வாங்கி சாப்பிடுவோம். சிலர் வீட்டிலேயே கேசரி, க்ளோப் ஜாமுன் போன்ற இனிப்பு வகைகளை தான் செய்வர். வேறு ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்கு இந்த சத்தான அதே நேரத்தில் மிகவும் சுவையான ஒரு அல்வாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க!
அல்வா என்று வரும் போது பலரும் கோதுமை அல்வா , பாதாம் அல்வா போன்றவற்றை தான் அதிகமாக சாப்பிட்டு இருப்போம். அதை தாண்டி இன்று நாம் பாசிப் பருப்பு வைத்து ஒரு தித்திப்பான சுவையில் பாசிப்பருப்பு அல்வா ரெசிபியை காண உள்ளோம். இதனை செய்ய மிக குறைந்த நேரமே ஆகும். மேலும் இதன் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். இந்த அல்வாவை வீட்டின் விஷேஷ தினங்கள், பண்டிகை நாட்கள் மற்றும் தெய்வங்களுக்கு நெய்வேத்தியமாக கூட படைக்கலாம் .
வாருங்கள்! கமகமக்கும் நெய் வாசனையில் தித்திப்பான பாசிப்பருப்பு அல்வா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- பாசிப்பருப்பு 1 கப்
- சக்கரை 1/2 கப்
- துருவிய தேங்காய்- 1/4 கப்
- நெய் -4 ஸ்பூன்
- முந்திரி பருப்பு- தேவையான அளவு
- குங்குமப்பூ- தேவையான அளவு
இனி சப்பாத்தி என்றால் மட்டன் தால் தான் வேண்டும் என்று கேட்பார்கள்!
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் பாசிப்பருப்பு சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி சுமார் 1 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி ஒரு மிக்சி ஜாரில் பாசிப்பருப்பை சேர்த்து கொரகொரவென என்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு இட்லி பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்த பாசிப்பருப்பு மாவினை இட்லி தட்டில் ஊற்றி , இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு , வெந்த பாசிப்பருப்பு இட்லிகளை எடுத்து ஆற வைத்து பின் மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நெய் சேர்த்து ,நெய் உருகிய பின்னர் அதில் முந்திரி பருப்பு, துருவிய தேங்காய் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
இப்போது பொடித்து வைத்துள்ள பாசிப்பருப்பு கலவையை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இப்போது சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். அனைத்தும் நன்றாக கலந்து அல்வா பதத்திற்கு திரண்டு வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி குங்குமப்பூ தூவி பரிமாறினால் தித்திப்பான பாசிப்பருப்பு அல்வா ரெடி!