Asianet News TamilAsianet News Tamil

உகாதி 2023- பாரம்பரிய சுவையில் பால் பாயசம் செய்து உகாதியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்!

வாருங்கள்! பாரம்பரியமான தித்திக்கும் பால் பாயசத்தை உகாதி தினமான நாளைக்கு சுலபமாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to Make Milk Sabudana Kheer  Recipe in Tamil
Author
First Published Mar 21, 2023, 7:50 PM IST

பொதுவாக வீட்டின் விஷேஷ தினமான திருமண நாள், பிறந்த நாள் போன்ற தினங்கள் மற்றும் பண்டிகை தினங்களில் செய்யப்படும் மிக முக்கிய இனிப்பு என்றால் அது பாயசம் தான் . இந்த பாயசத்தை செய்து தெய்வங்களுக்கும் பிரசாதமாக படைக்கலாம்.

எத்தனை விதமான இனிப்புகள் வந்தாலும் பாயாசத்திற்கு எப்போதும் ஒரு தாய் இடம் உண்டு. பாயசத்தில் சேமியா பாயசம், அவல் பாயசம், ஜவ்வரிசி பாயசம், பாசி பருப்பு பாயசம் என்று இன்னும் பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் நாளை உகாதியை முன்னிட்டு வெகு சிறப்பான மற்றும் பாரம்பரியமான பால் பாயசத்தை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வாருங்கள்! பாரம்பரியமான தித்திக்கும் பால் பாயசத்தை உகாதி தினமான நாளைக்கு சுலபமாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்:

பால்-1/2 லிட்டர்
சேமியா – 100 கிராம்
ஜவ்வரிசி – 100 கிராம்
சர்க்கரை – 250 கிராம்
ஏலக்காய் – 4
முந்திரி – 20
திராட்சை – 20
நெய் – தேவையான அளவு
 

நினைத்தது எல்லாம் நடத்தி தரும் கல் உப்பு பரிகாரம்!

செய்முறை:

முதலில் அடுப்பில் சாஸ் பானில் பால் ஊற்றி காய்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் பால் காய்ச்சிய பிறகு அதனை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து விட வேண்டும். மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து ஜவ்வரிசி சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜவ்வரிசியை கொதிக்கும் தண்ணீரில் அடுப்பின் தீயினை சிம்மில் வைக்க வேண்டும்.

இப்போது அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் நெய் ஊற்றி, நெய் காய்ந்த பிறகு, அதில் முந்திரி பருப்பு மற்றும் திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தாக அதில் சேமியாவை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதையும் கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

அனைத்தும் நன்றாக கொதித்த பிறகு இறுதியாக ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது ஆறிய பாலை ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்தால் பால் பாயசம் ரெடி! அவ்ளோதான்! இந்த தித்திக்கும் பால் பாயசத்தை செய்து தெய்வத்திற்கு நெய்வேத்தியமாக படைத்து உகாதியை குடும்பத்துடன் சிறப்புடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுங்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios