Asianet News TamilAsianet News Tamil

அசத்தலான மங்களூர் ஸ்பெஷல் சிக்கன் நெய் ரோஸ்ட் செய்து சுவைக்கலாம் வாங்க!

வாருங்கள்! டேஸ்ட்டான மங்களூர் ஸ்டைல் சிக்கன் நெய் ரோஸ்ட் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Mangalore Special Chicken Ghee Roast in Tamil
Author
First Published Jan 21, 2023, 7:00 PM IST

அசைவம் என்றால் சிக்கன் தான் பலரின் பேவரைட்டாக உள்ளது. சிக்கனில் பல விதமான ரெசிபிகளை செய்ய முடியும். எதை செய்து கொடுத்தாலும் அனைத்தும் உடனே காலி ஆகி விடும்.அப்படி இருக்கும் அதன் சுவையும் மணமும் . அப்படியான சிக்கன் வைத்து சூப்பரான ஒரு ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம்.இன்று நாம் சிக்கன் வைத்து மங்களூர் ஸ்டைலில் சிக்கன் நெய் ரோஸ்ட் செய்வதை காண உள்ளோம். இது பிரியாணி, ஃப்ரைட் ரைஸ் போன்றவற்றிக்கு சூப்பரான காம்போவாக இருக்கும்.

வாருங்கள்! டேஸ்ட்டான மங்களூர் ஸ்டைல் சிக்கன் நெய் ரோஸ்ட் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் - 1/2 கிலோ
  • அரைத்த தக்காளி - 1 கப்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
  • சீரகப் பொடி - 2 ஸ்பூன்
  • சர்க்கரை - 1 ஸ்பூன்
  • மிளகுத் தூள் - 2 ஸ்பூன்
  • கரம் மசாலா - 1 ஸ்பூன்
  • மல்லித் தூள் - 2 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • காய்ந்தமிளகாய் - 2
  • புளிச்சாறு - 1 ஸ்பூன்
  • மல்லித்தழை - 1/2 கப்
  • கறிவேப்பிலை -1 கொத்து
  • நெய்-தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

வாழைக்காய் பூரணக் கொழுக்கட்டை செய்ய தெரியுமா? அப்போ இதை படித்து செய்து பாருங்க!

செய்முறை:

முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொண்டு அலசி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நெய் ஊற்றி உருகிய பின்னர் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துகொள்ள வேண்டும்.பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்துக் கொண்டு அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து வதக்கி விட வேண்டும்.அடுத்ததாக அதில் அரைத்து தக்காளி பேஸ்ட் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

பின் அதில் கரம் மசாலா தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து அதன் கார வாசனை செல்லும் வரை கிளறி விட வேண்டும். நெய்யானது தனியாக பிரிந்து வரும் நேரத்தில் அதில் மேலும் சிறிது நெய் சேர்த்து சிக்கனை சேர்த்து உப்பு தூவி பிரட்டி விட வேண்டும்.அடுத்தாக அதில் மிளகுத்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து கிட்டதட்ட 10 நிமிடங்கள் வரை வதக்கி விட வேண்டும். பின் அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி, சிறிது சர்க்கரையும் சேர்த்து நன்றாக பிரட்டி விட வேண்டும்.

பின் ஒரு மூடி போட்டு மூடி வைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை வேக வைத்து பின் அதில் புளி கரைசலை சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி விட வேண்டும்.சிக்கன் நன்றாக வெந்து நெய் தனியாக பிரிந்து வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி, அதில் சிறிது மல்லித்தழையை தூவினால் மங்களூர் ஸ்டைல் சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios