மங்களூர் ஸ்பெஷல் பிரேக் பாஸ்ட் -"நீர் தோசை"! செய்யலாம் வாங்க
சுவையான மற்றும் மிருதுவான மங்களூர் நீர் தோசையை எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
எப்பொழுதும் ஒரே விதமான தோசையை சாப்பிட்டு அலுத்து விட்டீர்களா? அப்படியானால் கண்டிப்பாக இந்த நீர் தோசையை ஒரு முறை செய்து பாருங்கள்.இது மங்களூரின் பிரபலமான மற்றும் ஸ்பெஷல் பிரேக் பாஸ்ட் ஆகும். இந்த தோசைக்கான மாவினை மிக எளிமையாக தயார் செய்து விடலாம். தோசையும் பஞ்சு போன்று மிக மிருதுவாக இருக்கும். குறிப்பாக இந்த தோசைக்கு குறைவாக எண்ணெய் சேர்ப்பதால், வயதானவர்களுக்கும் இது ஏற்ற தோசை என்றும் கூறலாம்.
கொங்கு நாடு சுவையான மட்டன் குழம்பு செய்வது எப்படி ?
மேலும் இந்த தோசையை ஆறிய பின் சாப்பிட்டாலும் இதன் சுவை மற்றும் மிருது தன்மை அப்படியே இருக்கும். இதற்கு அனைத்து சட்னி வைத்து சாப்பிடலாம், கார சட்னி வைத்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும். சுவையான மற்றும் மிருதுவான மங்களூர் நீர் தோசையை எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
1 கப் பச்சரிசி
2 ½ கப் தண்ணீர்
1/2 கப் துருவிய தேங்காய்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
காலை உணவுக்காக நீர் தோசை செய்ய வேண்டும் எனில் பச்சரிசியை முதல் நாள் இரவே 2 அல்லது 3 முறை தண்ணீரில் நன்கு கழுவிய பின், தண்ணீர் ஊற்றி நன்கு ஊற விட வேண்டும். பின்பு காலையில் பச்சரிசியில் இருக்கும் நீரை வடிகட்டிய பின் மிக்ஸி ஜாரில் பச்சரிசியையும் மற்றும் துருவிய தேங்காயையும் சேர்த்துக் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஜோவென பெய்யும் மழைக்கு இடையில் ஒரு ''அரபிக் டீ'' சாப்பிடலாமா?
மாவை கொஞ்சம் கெட்டியாக அரைத்து சிறிது தண்ணீர் தெளித்து மையை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவினை ஒரு பெரிய பாத்திரத்தில் அல்லது கிண்ணத்தில் எடுத்து கொள்ள வேண்டும். இப்போது அரைத்த மாவுடன் ,சிறிது உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (ஒரு கப் பச்சரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் ) நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது நீர் தோசைக்கான மாவு தயார் ஆகி விட்டது.
அடுப்பில் தோசை கல்லை வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து கொண்டு, கல் சூடான பின் மாவை நன்றாக கலக்கி கொண்டு இடைவெளி இல்லாமல் ரவா தோசைக்கு ஊற்றுவது போல் மாவினை ஊற்றி , சிறிது எண்ணெய்யை தோசை மேல் ஊற்றி , மூடி போட்டு வேக வைக்க வேண்டும். ஓரங்கள் வெந்து வரும் போது,தோசையை நான்காக மடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோ தான் சுவையான மற்றும் மிருதுவான மங்களூர் நீர் தோசை ரெடி!