சுவைக்க தூண்டும் "மலபார் முட்டை மசாலா" செய்யலாம் வாங்க!

வாருங்கள்! ருசியான மலபார் முட்டை மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

How to make Malabar Egg Masala in Tamil

ஒவ்வொரு ஊர் அல்லது வட்டாரத்திற்கும் ஒவ்வொரு விதமான சமையல் முறை இருக்கும். உதாரணமாக நெல்லை ஸ்டைல், மதுரை ஸ்டைல், காரைக்குடி ஸ்டைல் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உள்ளன . 

அந்த வகையில் இன்று நாம் கேரளாவின் ஒரு பகுதியான மலபார் ஸ்டைலில் முட்டை ரெசிபியை காண உள்ளோம். இதனை சாதம் , சப்பாத்தி ஆகியவற்றிக்கு வைத்து சாப்பிடலாம். 

வாருங்கள்! ருசியான மலபார் முட்டை மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
முட்டை – 6
தக்காளி – 2
பச்சை மிளகாய்- 3
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன் 
மல்லி தூள்- 1 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
தேங்காய் பால் - 1 கப்
கடுகு-1/4 ஸ்பூன் 
சீரகம்-1/4 ஸ்பூன் 
மல்லித்தழை-கையளவு
கறிவேப்பிலை-1 கொத்து 
உப்பு-தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

குட்டிஸ்களின் பேவரைட் சீஸ் பைட்ஸ் இப்படி செய்து பாருங்க !

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் அல்லது குக்கரில் முட்டைகளை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொண்டு அதனை பாதியாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தாக பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

தேங்காயை துருவி மிக்சி ஜாரில் சேர்த்து தேங்காய் பால் எடுத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி , எண்ணெய் காய்ந்த பிறகு அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். 

பின் அதில் பொடியாக அரிந்த வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும். 

அடுத்தாக அதில் கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லித்தூள்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி விட்டு பின் பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து வதக்கி விட வேண்டும். 

அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு, தேங்காய் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். கலவை கொதித்து கொஞ்சம் கெட்டியாக வந்த பிறகு, வேக வைத்து இரண்டாக வெட்டி வைத்துள்ள முட்டைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.  இறுதியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவினால் சூப்பரான மலபார் முட்டை மசாலா ரெடி!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios