வீட்டிற்கு வரும் கெஸ்ட்டுக்கு 10 நிமிடத்தில் இப்படி "மைதா போண்டா" செய்து கொடுத்து அசத்துங்க!

வாருங்கள்! ருசியான மைதா போண்டாவினை வீட்டில் எளிதாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்.

How to make Maitha Bonda Recipe in Tamil

வழக்கமாக மாலை நேரத்தில் டீ அல்லது காபி குடிக்கும் போது நம்மில் பலரும் சூடான ஒரு ஸ்னாக்ஸ் வகையையும் சேர்த்து சாப்பிடுவோம். பொதுவாக சுட சுட பஜ்ஜி, போண்டா, வடை போன்றவற்றை தான் அதிகமாக செய்து சாப்பிடுவோம். அந்த வகையில் இன்று நாம் போண்டா வகையை தான் காண உள்ளோம். ரவை, அரிசி மாவு, மைதா போன்றவற்றை வைத்து பல விதமாக போண்டா ரெசிபிக்களை செய்ய முடியும்.


இன்று நாம் மைதா மாவினை சேர்த்து சட்டென்று எளிதாக செய்யக்கூடிய ஒரு போண்டா ரெசிபியை செய்ய உள்ளோம். இதனை குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி அனவைரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் சூப்பராக இருக்கும். மேலும் இதனை வீட்டில் வரும் கெஸ்ட்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விருப்பப்பட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

வாருங்கள்! ருசியான மைதா போண்டாவினை வீட்டில் எளிதாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் : 

  • மைதா மாவு - 1 கப்
  • புளித்த தயிர்--1/2 கப்
  • அரிசி மாவு - 1 ஸ்பூன்
  • சீரகம் -1/2 ஸ்பூன்
  • இஞ்சி -1/2 இன்ச்
  • பச்சை மிளகாய் -1
  • மல்லித்தழை- கையளவு
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

இனி இட்லி, தோசைக்கு பீர்க்கங்காய் சட்னி செய்து பாருங்க!

செய்முறை:

முதலில் சீரகத்தை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழையை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு,இடித்து வைத்துள்ள சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின் பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை,பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கலந்து விட வேண்டும்.

இப்போது புளித்த கெட்டி தயிர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டியின்றி சற்று கெட்டியாக மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் சூடான பின்,அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து விட வேண்டும். இப்போது சூடான எண்ணெய்யில் மாவை எடுத்து ஒரே அளவிலான சிறிய போண்டாக்களாக உருட்டிப் போட்டு, பொரித்து எடுத்தால் சூப்பரான சுவையில் மைதா போண்டா ரெடி!

இதற்கு தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். நீங்களும் இதனை ஒரு முறை செய்து பாருங்க.மீண்டும் எப்போது செய்வீர்கள் என்று கேட்கும் அளவிற்கு இதன் சுவை அபாரமாக இருக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios