ஸ்னாக்ஸிற்கு மதுரை ஸ்பெஷல் வெள்ளையப்பம் செய்து கொடுங்க!எத்தனை வைத்து கொடுத்தாலும் அனைத்தும் ஃபினிஷ் ஆயிடும்!

வாருங்கள்! மொறுமொறு வெள்ளையப்பம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Madurai Special Vellaiyappam in Tamil

என்ன தான் மதிய நேரத்தில் மூக்கு பிடிக்க சாப்பிட்டாலும் மாலை நேரத்தில் சுட சுட டீ யுடன் ஒரு ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் சத்தமே இல்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். மாலை நேர சிற்றுண்டிகளில் முதன்மையானது எனில் வடை, பஜ்ஜி, போண்டா போன்றவை பிரதான இடத்தை பெரும். அப்படியான போண்டா வகைகளில் ஒன்றான மதுரையின் ஸ்பெஷல் வெள்ளையப்பம் ரெசிபியை தன இன்று நாம் காண உள்ளோம்.

இதனை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இது மொறுமொறுவென்று இருக்கும். பொதுவாக அப்பத்தினை அரிசி மாவு அல்லது கோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து தான் அப்பம் செய்து சாப்பிட்டு இருப்போம்.

வாருங்கள்! மொறுமொறு வெள்ளையப்பம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை :

மைதா மாவு - 1 கப்
பால் - 1/2 கப்
சர்க்கரை - 1/4 கப்
சோடா உப்பு - 1/4 ஸ்பூன்
ஏலக்காய் - 4
அரிசி மாவு - 2 ஸ்பூன்
உப்பு- 2 சிட்டிகை
எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை :

முதலில் சர்க்கரையை பொடித்துக் கொண்டு அதனை மிக்சி ஜாரில் போட்டு 4 ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு ,சோடா உப்பு, உப்பு ,சர்க்கரை, மற்றும் அரிசி மாவு ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது இந்த மாவில் அரைத்த சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட்டு பின் அதில் சிறுக சிறுக பாலை சேர்த்து போண்டா பதத்திற்கு மாவு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் காய்ந்த பின்னர் அதில் ரெடி செய்து வைத்துள்ள மாவினை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி போட்டு அடுப்பின் தீயினை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக ஆன பின் பொரித்து எடுத்தால் சூப்பரான மதுரை ஸ்பெஷல் வெள்ளையப்பம் ரெடி!

பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுத்தால் சத்தம் மில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள்.தீடீர் விருந்தாளிகளுக்கும் இதனை சட்டென்று செய்து கொடுத்து அசத்தலாம். மொறுமொறுவென இருக்கும் இந்த அப்பத்தை நீங்களும் ஒரு முறை ட்ரை செய்து பாருங்க. 

மாரடைப்பு ஏற்படாமல் இருக்க நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்யும் 'சூப்பர்' உணவுகளை தினமும் எடுத்துக்கோங்க!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios