Asianet News TamilAsianet News Tamil

தொண்டைக்கு இதம் அளிக்கும் "திப்பிலி ரசம்" செய்வோமா!

இந்த குளிர் காலத்திற்கு அனைவருக்கும் ஏற்ற திப்பிலி ரசம் செய்து சாப்பிட்டு, சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை விரைவில் விரட்டி அடிப்போம்.
 

How to Make Long Pepper Rasam in Tamil
Author
First Published Dec 1, 2022, 5:02 PM IST

மழை மற்றும் பனிக் காலங்களில் நம்மில் அதிகமானோர் சளி,இருமல், காய்ச்சல் போன்றவற்றால் அவதிபடுவோம். இதற்கு மருந்து,மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாமல், வீட்டிலேயே கஷாயமோ, அல்லது ரசமோ செய்து சாப்பிட்டால் , மிக விரைவில் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கஷாயம் என்றால் கூட ஒரு சிலர் குடிக்க தயங்குவார்கள். ரசம் என்றால் சிறு குழந்தைக்கு கூட சாதத்தில் ஊற்றி, பிசைந்து சாப்பிட வைத்திடலாம். 

அந்த வகையில் இந்த குளிர் காலத்திற்கு அனைவருக்கும் ஏற்ற திப்பிலி ரசம் செய்து சாப்பிட்டு, சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை விரைவில் விரட்டி அடிப்போம்.

 மேலும் திப்பிலியானது தொண்டைப்புண், தொண்டைக் கட்டு ஆகியவற்றிற்கும் சிறந்த தீர்வை தரும். மேலும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை மிக துரிதமாக அதிகப்படுத்தும். அப்படிப்பட்ட திப்பிலி ரசத்தை வீட்டில் எளிமையாக செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். திப்பிலியில் ரசம் வைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

மிளகு - 10
கண்டந்திப்பிலி - 10
அரிசி திப்பிலி - 10
புளி - லெமன் சைஸ் 
வர மிளகாய்-1
கடுகு - 1 ஸ்பூன் 
சீரகம்- 1 ஸ்பூன்  
கறிவேப்பிலை-சிறிது 
பெருங்காயத்தூள் -1 சிட்டிகை 
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - கையளவு 

குளிர் காலத்திற்கு ஏற்ற சாக்லேட் மசாலா காபி செய்யலாம் வாங்க!

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் புளி போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் புளிக்கரைசல் எடுத்துக் கொண்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மல்லித்தழையை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்த பின் அதில் மிளகு, அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பை ஆஃப் செய்து விட்டு, அதனை ஆற வைத்து விட வேண்டும். அனைத்தும் ஆறியபின், ஒரு மிக்சி ஜாரில் அதனை போட்டு, சிறிது நீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு கடாயில் அரைத்த விழுது சேர்த்து, பின் அதில் எடுத்து வைத்துள்ள புளிக்கரைசல் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்துக் கொண்டு நன்றாக மிக்ஸ் செய்து கொண்டு கொதிக்க வைக்க வேண்டும். 

மற்றொரு அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து சிறிது எண்ணெய் விட்டு, அதில் கடுகு,சீரகம்,கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் போட்டு தாளித்து கொதிக்கும் ரசத்தில் சேர்த்து அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும். இறுதியாக மல்லித்தழையை தூவி இறக்க்கினால் அருமையான திபிலி ரசம் ரெடி!!!
 

Follow Us:
Download App:
  • android
  • ios