Asianet News TamilAsianet News Tamil

சிக்கன் எடுத்தா இப்படி ஒரு முறை "லெமன் சிக்கன்" செய்து கொடுங்க!

வாருங்கள்! டேஸ்ட்டான லெமன் சிக்கன் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Lemon Chicken Recipe in Tamil
Author
First Published Feb 7, 2023, 11:42 AM IST

சிக்கனை பிடிக்காது என்று சொல்லும் அசைவ பிரியர்களே எவரும் இருக்க மாட்டார்கள். சிக்கன் வைத்து செய்யப்படும் அனைத்து ரெசிப்பிகளையும் அசைவ பிரியர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி விரும்பி சாப்பிடக்கூடிய விதத்தில் இன்று நாம் ஒரு சிக்கன் வைத்து லெமன் சிக்கன் ரெசிபியை காண உள்ளோம். இதனை சாதம், சப்பாத்தி,நாண் ,புல்கா என்று அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். மேலும் இதனை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் மிக அருமையாக இருக்கும்.

வாருங்கள்! டேஸ்ட்டான லெமன் சிக்கன் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

  • சிக்கன் - 1/2 கிலோ
  • சிக்கன் ஸ்டாக் - 2 கப்
  • லெமன் ஜூஸ்-3 ஸ்பூன்
  • எலுமிச்சை தோல் - சிறிது
  • ஒயிட் பெப்பர் - 1 2ஸ்பூன்
  • கார்ன்ஃப்ளவர் - 2 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் -5
  • ஜாதிக்காய் - 1
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

என்ன! நிலக்கடலை வைத்து குலோப் ஜாமுனா! பார்க்கலாம் வாங்க!

செய்முறை :

முதலில் சிக்கனை சுத்தம் செய்து அலசிக் கொண்டு அதில் உப்பு மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக பிரட்டி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சின்ன பௌலில் கார்ன் பிளார் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைசல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் எலுமிச்சைத் தோலினை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். ஊற வைத்துள்ள சிக்கனை கார்ன் ஃப்ளவர் கரைசலில் சேர்த்து மேலும் ஒரு முறை பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் சிக்கனை சேர்த்து பொரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு தவா வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக அரிந்து வைத்துள்ள பச்சைமிளகாய் சேர்த்து வறுத்துக் கொண்டு பின் அதில் துருவிய எலுமிச்சைத் தோல், ஜாதிக்காய், ஒயிட் பெப்பர் சேர்த்து பிரட்டி விட்டு பின் அதில் சிக்கன் ஸ்டாக் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். இப்போது பொரித்து வைத்துள்ள சிக்கனைப் போட்டு சிறிது கார்ன் பிளார் கரைசல் மற்றும் லெமன் ஜூஸ் சிறிது சேர்த்து கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கினால் சூப்பரான சுவையில் லெமன் சிக்கன் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios