பருப்பு கொழுக்கட்டையை விட அதிக சத்துக்கள் நிறைந்த ''கேசரி கொழுக்கட்டை'' - ஈஸியா செய்யலாம் வாங்க!
கேசரி பூரணம் வைத்து சூப்பரான கேசரி கொழுக்கட்டையை செய்யலாம் வாங்க.
வழக்கமாக நாம் கொழுக்கட்டை என்றால் , தேங்காய் பூரணம் அல்லது பருப்பு பூரணம் வைத்து செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று சற்று வித்தியாசமாக கேசரி பூரணம் வைத்து சூப்பரான கேசரி கொழுக்கட்டையை செய்யலாம் வாங்க. இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை இருக்கும். இந்த தித்திப்பான கேசரி கொழுக்கட்டையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கேசரி கொழுக்கட்டை செய்ய தேவையான பொருள்கள்:
ரவை-100 கிராம்
அரிசி மாவு-200 கிராம்
தண்ணீர்-150 மில்லி
வெல்லம் - 150 கிராம்
துருவிய தேங்காய்-150 கிராம்
நெய் - 30 கிராம்
ஏலக்காய பொடி-1 சிட்டிகை
முந்திரி-10
காய்ந்த திராட்சை-10
குங்குமம் பூ-சிட்டிகை
உப்பு தேவையான அளவு
டேஸ்டியான , க்ரிஸ்பியான பாலக் கீரை கட்லெட்! செய்யலாம் வாங்க !
செய்முறை:-
அடுப்பில் ஒரு பான் வைத்து எண்ணெய் சேர்க்காமல், அதில் ரவை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து வைத்து விட்டு, அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய பௌலில் அரிசி மாவு, குங்கமப்பூ மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு,அதில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.இந்த மாவை சுமார் 10 நிமிடங்கள் வரை ஈரத்துணி போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு வாணலி வைத்து,அதில் சிறிது நெய் சேர்த்து, நெய் உருகிய பின்,முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை, வறுத்த ரவை, துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்பு ஊற வைத்த மாவை கையில் கொஞ்சம் எடுத்து சிறிய உருண்டையாக உருட்டி பின் அதை தட்டையாக தட்டி, அதில் கேசரியை கொஞ்சம் வைத்து , மூடி விட வேண்டும். இவ்வாறு அனைத்து மாவினையும் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். இட்லி தட்டில் கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த இட்லி தட்டுகளை,இட்லி பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரில் வைத்து மூடி விட்டு கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் வரை வேக வைத்து விட்டு அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். இப்போது இட்லி பாத்திரத்தை திறந்து இட்லி தட்டின் மேல் உள்ள கொழுக்கட்டைகளின் மீது சிறிது நெய் விட்டு எடுத்து விட்டால், சூப்பரான கேசரி கொழுக்கட்டை ரெடி!