டேஸ்டியான , க்ரிஸ்பியான பாலக் கீரை கட்லெட்! செய்யலாம் வாங்க !
பாலக் கீரையை வைத்து சத்தான கட்லெட் எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
நாம் சாப்பிடுவதே உயிர் வாழ்வதற்கு தான்.ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது. மேலும் சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்ததாக மட்டுமில்லாமல் சுவையாகவும் இருந்தால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அதே போல் நாம் நமது அன்றாட உணவுகளில் கீரையினை எடுத்துக் கொள்வது மிக பெரிய அளவில் நமக்கு நன்மைகளை தருகிறது. பெரும்பாலான குழந்தைகள் கீரையினை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்த்து விடுவார்கள்.
அப்படிப்பட்ட குழந்தைகளுக்காகவே இந்த பதிவு. ஏனெனில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பாலக் கீரையை வைத்து சத்தான கட்லெட் எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் . குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான ,க்ரிஸ்பியான பாலக் கட்லெட் செய்யலாம் வாங்க!
தேவையான பொருட்கள்:
பாலக்கீரை – 2 கட்டு
மைதா மாவு – 1/2 கப்
சீஸ் – 1/2 கப் (துருவியது )
பிரட் பீஸ் -4
பிரட் தூள் – 1/2 கப்
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 துண்டு
மல்லித்தழை- சிறிது
உப்பு –தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
சர்க்கரை நோயினை விரட்ட , ஆரோக்கியமான "ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்"!
செய்முறை:
முதலில் கீரையை நன்கு அலசி சுத்தம் செய்து, பின் பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதித்த உடன் கீரையை போட்டு சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கீரை பாதியளவு வெந்த பிறகு அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி விட்டு ,மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதே ஜாரில் மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து மை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு கிண்ணத்தில் அரைத்து வைத்துள்ள கீரை, அரைத்த இஞ்சி -மிளகாய் பேஸ்ட் ,வேக வைத்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம்,பொடியாக மல்லித்தழை ,நனைத்து பிழிந்து வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் துருவிய சீஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிசைந்த கலவையினை உருண்டைகளாக உருட்டி அல்லது ரோல் போன்று செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மைதா மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பான் வைத்து , அது நன்கு சூடான பின்பு, கட்லெட் உருண்டைகளை தட்டி மைதா மாவு கரைசலில் டிப் செய்து பிறகு அதனை பிரட் கிரம்ஸ்ஸில் போட்டு பிரட்டி எடுத்துக் கொண்டு , பானில் போட்டு வேக வைக்க வேண்டும். நடுநடுவே சிறிது எண்ணெய் தெளித்து வேக வைத்து எடுத்தால் சத்தான மற்றும் க்ரிஸ்பியான பாலக்கீரை கட்லெட் ரெடி! இதனை சாஸ் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.