Asianet News TamilAsianet News Tamil

இனிமே சப்பாத்தி என்றால் மீல் மேக்கர் மசாலா தான் செய்வீங்க!


வாருங்கள்! மீல் மேக்கர் மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

How to make Kerala Style Meal Maker Masala in Tamil
Author
First Published Jan 22, 2023, 2:46 PM IST

சப்பாத்திக்கு வழக்கமாக பட்டாணி குருமா, உருளைக்கிழங்கு குருமா, வெஜ் குருமா என்று அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். அதனை தவிர்த்து வேறு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்று நாம் கேரளா ஸ்டைலில் மீல் மேக்கர் மசாலா ரெசிபியை செய்ய உள்ளோம்.

இந்த மீல் மேக்கர் மசாலா சப்பாத்தி, நாண் ,புல்கா என்று அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் சூப்பராக இருக்கும்.

வாருங்கள்! மீல் மேக்கர் மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:


மீல் மேக்கர் - 2 கப்

மசாலா செய்வதற்கு:

  • தனியா - 1 ஸ்பூன்
  • மிளகு - 1 ஸ்பூன்
  • சோம்பு - 1 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • பட்டை - 1 இன்ச்
  • பிரியாணி இலை - 1
  • ஏலக்காய் - 4
  • தேங்காய் - 2 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 6
  • தண்ணீர் - தேவையான அளவு
  • உப்பு-தேவையான அளவு


தாளிப்பதற்கு:

  • வெங்காயம் - 1/2
  • பூண்டு - 5 பற்கள்
  • தக்காளி - 1
  • கேப்ஸிகம் - சிறிது
  • தக்காளி பேஸ்ட் - 2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • மல்லித்தழை- கையளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

    பிரெட் இருந்தா போதும் .டேஸ்டான வடையை சட்டென்று செய்து விடலாம்  


செய்முறை: 

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி மீல் மேக்கரைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் வரை வைத்து வேக வைத்து இறக்கி, பின் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய மீல் மேக்கரை ஆற வைத்து விட்டு அதில் இருக்கும் அதிகப்படியான நீரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து,அதில் மல்லி, மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து மிக்சி ஜாரில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதே கடாயில் லவங்கம், பிரியாணி இலை,பட்டை, ஏலக்காய் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து அதனையும் மிக்சி ஜாரில் எடுத்துக் கொண்டு பின் கடாயில் துருவிய தேங்காய் சேர்த்து வறுத்து மிக்சி ஜாரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு, அதனை அரைத்து பவுடர் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின்பு, பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் அதில் பொடியாக அரிந்த தக்காளியை சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி விட்டு அடுத்தாக அதில் அரைத்த மசாலா பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது அதில் வேக வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் கேப்ஸிகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி விட்டு தட்டு போட்டு மூடி மிதமான தீயில் வைத்து சுமார் 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக டொமேட்டோ சாஸ் மற்றும் மல்லித்தழையை தூவி கிளறி இறக்கினால், டேஸ்ட்டான கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் மசாலா ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios